ஆபத்தில் Google கைவிட்டாலும் APPLE கைவிடாது! சரியான நேரத்தில் பெண்களின் உயிரை காப்பாற்றிய ஐபோன் 14!

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அதன் ஐபோன் 14 சீரிஸ் போன்களில் Emergency SOS என்ற அவசரகால செயற்கைகோள் தொடர்பு வசதியை அறிமுகம் செய்தது. இந்த வசதியால் தற்போது கனடா நாட்டில் இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

தற்போது பலர் அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல Google Maps பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இது பல சமயம் சரியான வழியை காட்டினாலும் மனிதர்களுக்கு பழக்கம் இல்லாத சில இடங்களில் செல்லும்போது தவறான வழியை காட்டிவிடுகிறது.

கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இரு பெண்கள் பணியில் Google Maps காரணமாக வழிமாறி சென்றுவிட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்களிடம் அதிர்ஷடவசமாக ஆப்பிள் ஐபோன் 14 இருந்ததால் அதில் இருந்த Emergency SOS வசதியை பயன்படுத்தி உடனடியாக அவரச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பாதுகாப்பு படையினருக்கு ஆப்பிள் நிறுவனம் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த செயற்கைகோள் தொடர்பு வசதி அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளதாக அந்த பெண்கள் இருவர் கூறியுள்ளனர். Google நிறுவனம் அவர்களை கைவிட்டாலும் ஆப்பிள் நிறுவனம் கைவிடவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முக்கிய சாலையில் சென்றுகொண்டிருந்த சமயம் முன்பக்கம் ஏதோ விபத்து காரணமாக அதிகப்படியான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வழியை அவர்கள் Google Maps மூலமாக தேடியுள்ளனர்.

Google Maps அவர்களுக்கு கட்டிய மாற்றுவழியில் சுமார் 20 கிலோமீட்டர் வரை சென்ற அவர்களை ஒருகட்டத்தில் பனி மூடிவிட்டது. அவர்கள் கார் பனியில் சிக்கிக்கொண்டதால் வெளியேறமுடியாமல் இருந்துள்ளார்கள். பின்னர் அவர்களின் ஐபோன் 14 SOS வசதி மூலமாக அவசர உதவி எண் 911 அழைத்ததும் அவர்களுக்கு உதவி கிடைத்துள்ளது.

இந்த வசதி இல்லை என்றால் அவர்களை மீட்கும் பணி மேலும் நீண்டிருக்கும் என்றும் அதற்குள் குளிரில் அவர்கள் இறந்துபோயிருக்கலாம் என்றும் மீட்பு படை கூறியுள்ளது. இந்த Emergency SOS மூலமாக நாம் யாருடனும் பேசமுடியாது. ஆனால் அதைவைத்து நாம் Text அனுப்பலாம். இது Apple நிறுவனத்தின் கவனத்திற்கு உடனடியாக சென்று அந்த நிறுவனத்தின் உதவியுடன் அந்த SOS அனுப்பப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள அவரச உதவிக்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகு மீட்பு படைக்கு சிக்னல் பற்றிய விவரங்கள் தெரியும்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் SOS அழைப்பு இதுவாகும். இந்த வசதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. இந்த வசதி இந்தியாவில் இல்லை. இந்திய அரசின் கடுமையான சட்ட நெறிமுறைகள் காரணமாக இந்த வசதியை இந்தியாவில் ஐபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தமுடியாது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.