மேகன்-ஹரி உறவில் விரிசல்., ராணி எலிசபெத்தின் மரணத்தை முன்னறிவித்த புதிய நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரி இறுதியில் பிரிந்துவிடுவார்கள் என எதிர்காலத்தை கணித்து கூறும் நபர் ஒருவர் கணித்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கும், அவர்கள் ‘இறுதியில் பிரிந்துவிடுவார்கள்’ என்று ராணி எலிசபெத்தின் மரணத்தை கணித்தவர் தெரிவித்துள்ளார். புதிய நாஸ்ட்ராடாமஸ் ‘புதிய நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் (Craig Hamilton-Parker), இளவரசர் ஹரியுடனான மேகனின் உறவு முறிவு ஏற்படத் தொடங்கும் என்றும், இறுதியில் அவர்கள் பிரிந்துவிடுவார்கள் என்றும், இதனால் … Read more

திமுகவின் இரட்டை நிலைப்பாடு: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

சென்னை: ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக இரட்டை வேடம் போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்காததையும், கரும்பு கொள்முதல் செய்யாததையும் வன்மையாக கண்டிப்பதாக … Read more

மூல வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்தும் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்: வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் பரமசிவன் கோவில் கண்மாய், சிறுகுளம் உள்ளிட்ட 8 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கண்மாய்களுக்கு மூலவைகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் இருந்து வரத்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மழைபெய்து ஆறு மற்றும் அருவியில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் கண்மாய்களில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் … Read more

வெள்ளம் வெள்ளமாக வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்! கழுகு பார்வை காட்சிகள்

வெள்ளம் வெள்ளமாக, வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்..! கழுகு பார்வை காட்சிகள் கடலூர் வெள்ளி கடற்கரையில் இன்று லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடினர். குதிரை சவாரி அங்கிருக்கும் ராட்டினங்களில் குழந்தைகள் விளையாட வைத்து மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். நேற்று மாலை 6 மணிக்கு வெள்ளி கடற்கரையில் கூட தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் இன்று கூடுதலான நேரம் அனுமதிக்கப்பட்டது. இதனால் பிற்பகலில் இருந்தே கூட்டம் அலைமோதியது. மாலை அவர்கள் வீடு திரும்பும் வேலையில் அதிகளவு … Read more

பெண்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் கைகலப்பு – மோதலில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் நேரிட்டது. டெல்லி – உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது சில ஆண்கள் வலுக்கட்டாயமாக இரண்டு பெண்களுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளனர். இதற்கு அப்பெண்களின் கணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் மூண்டு, கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் குடியிருப்பில் வசிப்போர் மற்றும் பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, … Read more

‛ஜூனியர் என்டிஆர் 30' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது.தற்போது ஜூனியர் என்டிஆர், கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

ராணுவத்தை மேலும் பலப்படுத்த வட கொரிய அதிபர் கிம் திட்டம்| North Korean President Kim plans to further strengthen the military

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்:“அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க ராணுவத்தின் பலம் இரு மடங்கு அதிகரிக்கப்படும்,” என, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். கிழக்காசிய நாடான வட கொரியாவில் புத்தாண்டு தினமான நேற்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. தலைநகர் பியோங்யாங் நகருக்கு தெற்கே, வடக்கு ஹுவாங்கே மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றில் மூன்று குறுகிய துார ஏவுகணைகள்; ஒன்று மட்டும் நீண்ட … Read more

அரச ஊழியர்கள் உறுதிமொழி மேற்கொள்ளும் பிரதான வைபவம் பிரதமர் தலைமையில் நாளை

அரச சேவையில் மனித வளத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து தற்போது நிலவும் சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ஊழியர்கள் முன்னரிலும் பார்க்க சிறப்பான முறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புத்தாண்டில் அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் முக்கிய வைபவம் பிரதமர் … Read more

முன்னாள் சூப்பர் ஸ்டாரா… கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்; பிஸ்மி வீட்டுக்கே சென்று வாக்குவாதம்

முன்னாள் சூப்பர் ஸ்டாரா… கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்; பிஸ்மி வீட்டுக்கே சென்று வாக்குவாதம் Source link

தெருவில் வீசப்பட்ட மூன்று மாத கரு! தேனி அருகே கொடூரம்!

தேனி மாவட்டம், கண்டமனூர் கிராமத்தின் சாலையில் 3 மாத கரு வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, 3 மாத கருவை மீட்ட போலீசார், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கருவை சாலையில் வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள … Read more