அதுக்கு நாங்க ரெடி, நீங்க ரெடியா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

தமிழகத்தில் பாஜக ஒரு ராட்சசனைபோல வளர்ந்து வருகிறது என்று அண்மையில் கூறியிருந்தார் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவரது இந்த கருத்துக்கு நேர்மாறான கருத்தை தற்போது தெரிவித்துள்ளார் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். புத்தாண்டை முன்னிட்டு, பிரபல தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “திமுகவோ, தமிழக மக்களோ பாஜகவை முதன்மையான எதிர்க்கட்சியாக பார்க்கவில்லை எனவும், 2001 இல் திமுக தோளிலும், 2021 அதிமுகவின் தோளிலும் சவாரி செய்தே தன் கட்சிக்கு எம்.எல்.ஏக்களை பாஜக பெற்றுள்ளது” என்றும் … Read more

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; ஹரியானா அமைச்சர் பதவி விலகல்.!

ஹரியானாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பாலியல் குற்றச்சாட்டு அடிப்படையில் ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜூனியர் தடகள பயிற்சியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியானா விளையாட்டு அமைச்சர் சந்தீப் சிங் மீது சண்டிகர் போலீசார் இன்று பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவரது இமேஜை கெடுக்கும் முயற்சி என்று குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். “எனது … Read more

2023ல் எண்கணிதத்தில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் (Video)

மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன. எண் கணிதம் வைத்து வாழ்க்கைக்கு தேவையான பிரதானமான பலன்களை ஜோதிட சாஸ்திரம் போல கூற முடியாது என்றாலும் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். ஒருவருடைய பிறந்த தேதி, வீட்டின் இலக்கம், பெயர் எழுத்துக்களின் கூட்டுத்தொகை போன்ற எண்களுக்கும் அவருக்கு நிகழக்கூடிய இன்ப துன்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவருக்கு அவர் பெயரை மாற்றி அவருக்கு சாதகமான எண் … Read more

எவ்ளோ பெரிய தந்தம்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியோடிய நபர் – நீலகிரியில் பரபரப்பு

தற்போது காலநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, உணவு பொருள்கள் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால், வன விலங்குகள்  குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழையும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  கரடி, மான், யானை என வன விலங்குகள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.  இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று (ஜன. 1) அதிகாலை கூடலூரில் இருந்து கேரளா செல்லும் … Read more

புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்..!

புத்தாண்டு பிறந்த சுமார் அரைமணி நேரத்தில், கீவ் மற்றும் பிற நகரங்களின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில், 22 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. வெற்றி கிடைக்கும் வரை சண்டையை தொடருவோம் என ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரையில் குறிப்பிட்ட நிலையில், தார்மீக மற்றும் வரலாற்று உரிமை, ரஷ்யாவின் பக்கம் உள்ளதாக, தனது புத்தாண்டு உரையில் புதின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று 20 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்திய … Read more

ஜன.3 முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பெரிய மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பு வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கோவில்கள், பேராலயங்கள் போன்றவற்றில் நள்ளிரவு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அந்த வகையில் கிருஷ்ணகிரியில் உள்ள  பெரிய மாரியம்மன் கோவிலில் ஆங்கில … Read more

மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

சென்னை: மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை கோரிய வழக்கை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

பூந்தமல்லி: வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர் மீது மது பாட்டில் வீச்சு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர் மீது மது பாட்டில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது வீட்டின் அருகே நேற்று இரவு வாலிபர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மது அருந்தி கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை கார்த்திகேயன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கார்த்திகேயன் மீது கத்தியை கொண்டு தாக்க முயற்சி செய்தனர். அதனை … Read more

கமலின் 234வது படத்தில் திரிஷா?

விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024ம் ஆண்டு … Read more