வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகாித்து வருகிறது. இதையடுத்து சீனா, ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த 6 நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு இன்று முதல் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட 6 நாடுகளில் இருந்து … Read more

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34%லிருந்து 38% ஆக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34%லிருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். அகவிலைப்படி உயர்வினை இன்று முதல் செயல்படுத்திட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு

டெல்லி: கிரேட்டர் கைலாஷ் இல் உள்ள மூத்த குடிமக்கள் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 13 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று சந்தன் சவுத்ரி, தெற்கு காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு

புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நடிகர் யோகிபாபு முருகரை தரிசனம் செய்வதற்காக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கே விஐபிகள் செல்லும் பாதையில் செல்வதற்காக சுமார் ஒருமணி நேரம் … Read more

திராவிட மாடல் அரசு நடப்பதும், அதற்கு நீங்க ஒத்து ஊதும் நிலையிலும், இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்கலாமா காம்ரேட்?| speech, interview, statement,

மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவுகளை கலந்தது மிகவும் கண்டனத்துக்குரியது. போலீசார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியலின மக்களை, கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது நடக்கிறது; இரட்டைக் குவளை முறையும் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில், ‘திராவிட மாடல் அரசு’ நடப்பதும், அதற்கு நீங்க ஒத்து ஊதும் நிலையிலும், இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்கலாமா காம்ரேட்? … Read more

பாலிவுட்டின் காதல் ஜோடி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானிக்கு பிப்ரவரியில் திருமணம்!

பாலிவுட்டில் காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றனர். நடிகர் ரன்பீர் கபூர் தன் காதலியான நடிகை அலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். கத்ரீனா கைஃப் தன் காதலன் விக்கியைத் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொண்டார். அந்த வரிசையில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இணைய இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிகை கியாரா அத்வானியை காதலிப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இருவரும் அந்த செய்தியை … Read more

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஜன.31 வரை காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை 1.62 கோடி மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாம் மூலம் 87.91 லட்சம் பேரும், ஆன்லைன் மூலம் 74.67 … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022-ல் ரூ.1,320 கோடி உண்டியல் வருவாய்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் ஒரு நாள் உண்டியல் வருவாய் ஒரு லட்சத்தை கடந்தது. இது தற்போது பன்மடங்கு உயர்ந்து தினமும் சராசரியாக ரூ. 3.5 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கிறது. இதனால், இந்த 2022-ம்ஆண்டு ஏழுமலையான் கோயில்உண்டியலில் பக்தர்கள் ரூ.1,320கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் தொடர்ந்து கடந்த 10 மாதமாக பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். டிசம்பர் … Read more

லீவு முடிஞ்சு சென்னை திரும்பணுமா? TNSTC ஸ்பெஷல் பஸ் வசதி… மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டுத் தேர்வு மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி ஒருவார காலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பலரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை காலத்தை சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கிடையில் புத்தாண்டு பண்டிகையை ஓட்டி சனி, ஞாயிறு ஆகிய நாட்களை சொந்த ஊர்களில் அல்லது சுற்றுலா தலங்களில் கழிக்க பலரும் புறப்பட்டு சென்றுள்ளனர். இன்றுடன் அனைவரது விடுமுறையும் முடிவுக்கு வருகிறது. எனவே இன்று இரவு அனைவரும் சென்னைக்கு … Read more