Thalapathy 67, Vijay: அடப்பாவமே, மாஸ்டரில் நடந்தது தளபதி 67லும் விஜய்க்கு நடந்துடுச்சே

Vijay: மாஸ்டர் படத்தில் விஜய்க்கு நடந்த விஷயம் தற்போது தளபதி 67 படத்திலும் நடந்துவிட்டதே என பேச்சு கிளம்பியிருக்கிறது.

தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷாவும், விஜய்யும் மீண்டும் சேர்ந்து நடிப்பது தான் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
லோகேஷ்தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானதுமே விஜய் ரசிகர்களுக்கு லைட்டாக பயம் வந்தது. ஏனென்றால் முன்னதாக விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடந்த சம்பவத்தை தளபதி ரசிகர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. மாஸ்டரில் ஹீரோ விஜய்யை வில்லன் விஜய் சேதுபதி ஓவர்டேக் செய்துவிட்டார்.

மாஸ்டர்மாஸ்டர் படம் பார்த்த அனைவரும் விஜய் சேதுபதி பற்றி தான் பேசினார்கள். மாஸ்டரின் ஹீரோ விஜய் தான், ஆனால் அது விஜய் சேதுபதியின் படம் என்று விமர்சனம் எழுந்தது. அதே நிலைமை தளபதி 67 படத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே விஜய் ரசிகர்களின் பயம். ஆனால் அவர்கள் பயந்தது போன்றே நடந்துவிட்டது. அதுவும் படம் ரிலீஸாவதற்கு முன்பே நடந்திருக்கிறது.
லோகேஷ்விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அவரால் தான் அந்த படத்திற்கு ஹைப் ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போதோ லோகேஷ் கனகராஜ் பற்றி தான் அனைவரும் பேசுகிறார்கள். லோகேஷால் தளபதி 67 படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள். இது விஜய்யின் படம் என்பதை தாண்டி லோகேஷ் கனகராஜின் படம் என்றாகிவிட்டது. லோகேஷ் படம், லோகேஷ் படம் என்றே சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.
டிசைன்Thalapathy 67: தளபதி 67 பூஜைக்கு யார் வந்ததுனு பார்த்தீங்களா?: கதை கசிந்துவிட்டதே லோகிபடப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே தளபதியை ஓவர்டேக் செய்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டரில் விஜய்க்கு விஜய் சேதுபதி செய்ததை தற்போது லோகேஷ் கனகராஜ் செய்துவிட்டார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். இது போதாது என்று அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் என ஒரு வில்லன் கூட்டமே இருக்கிறது. அவர்களும் விஜய்யை ஓவர்டேக் செய்துவிடுவார்கள். அதற்கு காரணம் லோகேஷின் பட டிசைன் அப்படி என்று விமர்சனம் எழுந்துள்ளது.

எல்.சி.யூ.Thalapathy 67: தம்பி, இந்த சித்து விளையாட்டுலாம் என்கிட்ட வேணாம்: லோகேஷுக்கு விஜய் போட்ட உத்தரவுதளபதி 67 படத்தில் உன்னுடைய எல்.சி.யூ. இருக்கக் கூடாது. இது எனக்கான யூனிவர்ஸாக இருக்க வேண்டும் என லோகேஷுக்கு உத்தரவிட்டுள்ளாராம் விஜய். எல்.சி.யூ. வாக இருந்தால் தளபதி 67 படத்தில் கமல் ஹாசன், ஃபஹத் ஃபாசில், சூர்யா, கார்த்தியை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.