ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு..!

மும்பையில் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு சென்ற மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து தெரிவித்த சக்தி காந்த தாஸ், அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேலாண்மை, பணம் செலுத்துதல், டிஜிட்டல் வழி கடன் வழங்கும் முறை உள்ளிட்டவை தொடர்பாக பில்கேட்சுடன் ஆலோசனை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். போலியோ ஒழிப்பு, எச்.ஐ.வி. பரவலைக் கட்டுப்படுத்துதல், வறுமை ஒழிப்பு போன்றவற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்து, பில்கேட்ஸ் அண்மையில் புகழாரம் தெரிவித்திருந்த … Read more

பழைய ஓய்வூதிய திட்டம்? அனைத்து துறைகளிடமும் அறிக்கை கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அது தொடர்பாக அனைத்து துறைகளும் அறிக்கை தாக்கல் செய்ய  நிதித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசுசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறை … Read more

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் யானை ஆண்டாளுக்கு இன்று 45 பிறந்தநாள். 28.02.1979 ஆம் ஆண்டு பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த ஆண்டாளை திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்தார் அவர் பின்பு ஆண்டாளை காரமடை அரங்கநாத சுவாமி கோயிலுக்கு தானமாக வழங்கினார், காரமடை கோயிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசிர்வாதம் … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

டெல்லி: டெல்லி வரும் போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார், அதன்படி இன்று அவரை சந்தித்தேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் உடனான இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த … Read more

கேரளா திரிச்சூர் கோயிலுக்கு ரோபோ யானை நன்கொடை| Robot elephant donated to Kerala Thrissur temple

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திரிச்சூர்: கேரளாவில் திரிச்சூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலுக்கு ரோபோ யானை நன்கொடையாக வழங்கப்பட்டது. கேரளாவின் திரிச்சூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் பல்வேறு சடங்குகளை செய்வதற்காக ரோபோ யானையை விலங்குகள் நல அமைப்பான பீட்டா நன்கொடையாக வழங்கியுள்ளது. 11 அடி உயரமும், 800 கிலோ எடை கொண்ட ரோபோ யானைக்கு இரிஞ்சடப்பள்ளி ராமன் என பெயரிடப்பட்டுள்ளது. .5 லட்சம் செலவில் ரோபோ யானையை உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார சக்தியால் இயங்க கூடிய … Read more

'அவுட் ஆப் போகஸ்' புகைப்படங்களைப் பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்

சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பலரும் அவர்களது விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள், டிவி நடிகைகள், டிவி தொகுப்பாளர்கள் என பலரும் விதவித ஆடைகளில், விதவித புகைப்படங்களை வெளியிட்டு 'லைக்ஸ்'களை அள்ளுவார்கள். முன்னணி நடிகைகள் என்றால் சில பல லட்சங்களுக்கு லைக்ஸ் வரும். புகைப்படங்களைப் பதிவிடும் போது தரமாக எடுக்கப்பட்ட, அழகான புகைப்படங்களை மட்டுமே அனைவரும் பதிவிடுவார்கள். ஆனால், முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நேற்று சில மோசமான தரத்தில் எடுக்கப்பட்ட 'அவுட் … Read more

சென்னை வாகன ஓட்டிகளே அடுத்த ஆப்பு! இந்த சாலை விதியை மறந்து விடாதீங்க! எச்சரிக்கும் காவல்துறை!

சென்னை சாலை சிக்னல்களில், பொதுமக்கள் சாலையை கடக்க உதவும் சிப்ரா (வெள்ளைக் கோட்டினை) கோட்டினை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக, 3702 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும். போக்குவரத்தை திறம்பட மேம்படுத்தி ஒழுங்குபடுத்தவும் இடைவிடாத முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும். பல்வேறு அணுகுமுறைகளுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், சிக்னல் மீறுபவர்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புதல், நிறுத்தல் கோட்டை மீறி … Read more

புதுச்சேரி: சாலை விதிகளை மீறுபவர்களுக்கு `செக்’ வைத்த காவல்துறை! – நடைமுறைக்கு வந்தது ’இ–செலான்’

புதுச்சேரியில் அதிகரித்துவரும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் ‘ இ-செலான்’ முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான கையடக்க கருவியை அனைத்து காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்களுக்கு ஐ.ஜி சந்திரன் வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சமீபத்தில் தற்கொலை செய்த 3 காவலர்களில் 2 பேர் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தற்கொலைக்கு மன அழுத்தமோ, வேலை பளுவோ … Read more

அரசு நெல் கொள்முதல் மையத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டாய வசூல்: மதுரை விவசாயிகள் கவலை

மதுரை: மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு வரும் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இப்புகார் குறித்து தமிழக முதல்வர், அமைச்சர், ஆட்சியர் என மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் குலமங்கலம் பகுதியில் இரண்டாம் போக சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு நெல் கொள்முதல் மையம் பிப்.8ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை ஒரு மூட்டைக்கு ரூ.50 … Read more