அதள பாதாளத்தில் எல்ஐசி!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் இன்று 8 சதவீதம் சரிந்து 601 ரூபாய்க்கு விற்பனையானதால் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியிருப்பது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது என்று கூறிய ஹிண்டன்பா்க், அதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் … Read more

பிரபல நடிகரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா!!

திரைப்படம் தாமதமாவதால் நடிகை சமந்தா பிரபல நடிகரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார். சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவர் கடந்த சில மாதங்களாகவே மையோசிடிஸ் என்கிற தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். நோய் பாதிப்பு ஏற்பட்ட போது அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படம், வீடியோக்களை சமந்தா வெளியிட்டார். … Read more

வீட்டைவிட்டு வெளியேற்றியதால் ஆத்திரம்; 25 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய நபர்!

மும்பையிலுள்ள கல்பாதேவி பனஸ்வாடியில் வசித்தவர் கீதா விர்கர். சமூக சேவகியான இவர், மகேஷ் விஷ்வநாத் (62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ் மது மற்றும் சூதாட்டத்துக்கு அடிமையாகி இருந்தார். அடிக்கடி கீதாவிடம் மது அருந்த பணம் கேட்டு சித்ரவதை செய்து வந்தார். இதனால் கீதா வீட்டை காலி செய்யும்படி மகேஷிடம் கேட்டுக்கொண்டார். அதனால், மகேஷ் வீட்டைவிட்டு வெளியேறினார். மகேஷும், கீதாவும் 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. திடீரென வீட்டைவிட்டு … Read more

மத்திய பட்ஜெட் 2023-ல் பயிர் கடன் தள்ளுபடி, வட்டி இல்லா வேளாண் கடன்கள் எங்கே? – தமிழக விவசாயிகள்

தஞ்சை: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறியது: “மத்திய அரசின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கின்ற கோவர்தன் மற்றும் பிரணாம் திட்டம் மற்றும் வேளாண் விளைபொருட்களைச் சேமித்து … Read more

அழகிரி எங்கே… ஈரோடு கிழக்கில் இளங்கோவனுக்கு வந்த புது சிக்கல்?

காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் என்பது எழுதப்படாத விதியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஈவிகேஸ் இளங்கோவன், கே.எஸ்.அழகிரி , தங்கபாலு உள்ளிட்டோரை சொல்லலாம். நாற்காலிகள் பறப்பது, உருட்டுக்கட்டைகள் பாய்வது, சட்டைகள் கிழிவது என காங்கிரஸ் கூட்டம் என்றாலே அதிரி புதிரி சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது. ஒவ்வொரு கோஷ்டியும் கட்சி மேலிடத்தில் பல்வேறு விதங்களில் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி தமிழ்நாடு அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் … Read more

2023 பட்ஜெட்; பாதுகாப்புத்துறைக்கு 5.93 லட்சம் கோடி ஒதுக்கீடு.!

ஒன்றிய அரசின் 2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட். அனைவருக்கும் பலன் அளிக்கும் … Read more

Thalapathy 67: விஜய்யால் தான் நான் மாறினேன்..வெளிப்படையாக பேசிய SAC ..!

தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் செய்யும் வசூல் சாதனைகளை பற்றி அனைவருக்குமே தெரியும். என்னதான் இவரின் படங்களின் விமர்சனங்கள் முன்ன பின்ன இருந்தாலும் ரசிகர்களின் பேராதரவினால் வசூல் ரீதியாக விஜய்யின் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெரும். அதற்கு எடுத்துக்காட்டாக விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான இரு படங்களை சொல்லலாம். பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரிதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாக … Read more

Education Budget 2023: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்..

கல்வி யூனியன் பட்ஜெட் 2023: நிதி அமைச்சர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், கல்வி மற்றும் தொழில் துறையிலும் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து, இந்தியாவில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். மேலும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக அதே இடங்களில் 157 நர்ஸிங் கல்லூரிகள் அமைக்கப்படும். இதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகளில் 38800 ஆசிரியர்கள் … Read more

ஜனவரி 4 முதல்… கனேடிய குடியுரிமை தொடர்பில் ஒரு பயனுள்ள செய்தி: வீடியோவும்!

கனடாவில், தற்போது மின்னணு கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மின்னணு வடிவில் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் இது, காகிதத்தில் அச்சிடப்பட்ட சான்றிதழுக்கு ஒரு மாற்றாகும். 2023 ஜனவரி 4ஆம் திகதி முதல், நீங்கள் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்தாலோ அல்லது குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தாலோ, குடியுரிமைச் சான்றிதழ் காகித வடிவில் வேண்டுமா அல்லது மின்னணுச்சான்றிதழ் வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் என பெடரல் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் என்பது, … Read more

ஜனவரி மாத ஜி. எஸ். டி. வசூல் ரூ.1,55,922 கோடி

டெல்லி: 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நிலவரப்படி, ஜனவரி மாத ஜி. எஸ். டி. வசூல் ரூ.1,55,922 கோடி என நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. … Read more