கன்னடத்தில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை

பாலிவுட்டில் வெளியான 'கல்லி பாய்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர் மல்லிகா சிங். ஜான்பாஸ் சிந்துபாத், ராதாகிருஷ், ஜெய் கன்கய்யா லால் கி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். எஸ்கேப் லைவ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சுனி இயக்கத்தில் வினய் ராஜ்குமார் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார். மல்லிகா சிங் நடித்த … Read more

இந்தியா – இலங்கை இடையிலான  7ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு

இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 வரையில் புதுடில்லியில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையைச் செர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் ஆராயப்பட்டதுடன் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய மார்க்கங்கள் குறித்தும் இம்மாநாட்டில் அடையாளங்காணப்பட்டது.  2.         இதேவேளை … Read more

கணக்கை முடிக்க வங்கி முன் திரண்ட மக்கள்… அதானி பிரச்னைதான் காரணமா? உண்மை என்ன?

அதானி குழும நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி புகார்களை முன்வைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் அதிர்வலைகள் ஒரு மாத காலத்துக்கும் மேல் ஆகியும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அய்ன் நகரத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளையின் முன் மக்கள் திரண்டனர். இதற்குக் காரணம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகும் பேங்க் ஆஃப் பரோடா அதானி நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் என கூறப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அந்த … Read more

“நீட் தேர்வு விலக்கு குறித்து கோரிக்கை வைத்தேன்” – பிரதமர் மோடியை சந்தித்த உதயநிதி தகவல்

புதுடெல்லி: “நீட் தேர்வு விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அது தொடர்பாக பிரதமர் சில விளக்கங்களை அளித்தார். இந்த விவகாரத்தில் திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் கூறியதாக, தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (பிப்.28) சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: … Read more

அதிகரிக்கும் வெயில்: வெப்ப அலை நோய்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மார்ச் 1-ஆம் தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களைக் கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் சுகாதாரத் துறை மற்றும் சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி … Read more

கோரிக்கை வைத்தேன் ஆனா… புஸ்வானமான உதயநிதியின் டெல்லி டூர்..!

டெல்லிக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்; பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்துகொள்ள நேற்று டெல்லி வந்தேன். அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் … Read more

Pathu Thala: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'பத்து தல' படக்குழு: தரமான சம்பவம் லோடிங்.!

‘மாநாடு’ படத்தின் மூலம் அதிரடியான கம்பேக் கொடுத்த சிம்பு அதனை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். இந்தப்படம் ரிலீசாகி பெரும் வெற்றியை குவித்தாலும் சிம்பு அடுத்ததாக எந்த புதிய படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்திற்கு முன்பாக அவர் கமிட்டான பத்து தல படம் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு, கெளதம் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது … Read more

லண்டனில் உள்ள துவாரகா உண்மையான பிரபாகரனின் மகளா:- சித்தார்த்தன் கேள்வி (Video)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகப் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாகத் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (28.02.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகச் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். பொய்யான கருத்துகள் இவ்வாறான நிதி சேகரிப்பு சுவிஸ்லாந்து நாட்டில் அண்மையில் … Read more

மாநில அரசு ஒரு முடிவு எடுத்தால் ஆளுநர் ஏற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மற்றும் முதலமைச்சர் பக்வந்த் மான் ஆகியோருக்கு இடையிலான பட்ஜெட் அமர்வு தொடர்பான சர்ச்சை வழக்கு இன்று (பிப்ரவரி 28) உச்சநீதிமன்றத்தை எட்டியது. அதாவது முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் ஆலோசனை குழு பஞ்சாப் மாநிலதில் மார்ச் 3 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என அனுமதி கோரி ஞ்சாப் ஆளுநராகவுள்ள பன்வாரிலால் புரோஹித்திடம் ஆவணங்கள் அளித்திருந்தனர். ஆனால், பஞ்சாப் மாநில ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் தாமதப்படுத்தி … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் பிறந்தநாள் பரிசா?

பழைய ஓய்வூதியத் திட்டம்:  தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வரும் என்ற நம்பிக்கையை நிதர்சனமாக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக சூசக தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசின் ஒரு அறிக்கையின் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்துடன் ஒப்பிடும்போது, பழைய … Read more