வட இந்திய தொழிலாளர்கள் வதந்தி வீடியோ: தமிழ்நாடு காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகள்!

வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோ, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், ஆன்லைன் மூலம் பண மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடியோ பதிவு பீதி தொடர்பாக காவல்துறை, தொழில் துறை சிறப்பாக கையாண்டு சுமுகமாக்கியுள்ளனர். வதந்தி குறைந்துள்ளது. … Read more

கர்நாடக தேர்தல் 2023: இங்கயும் பி.கே பாய்ஸ் தான்… களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் சீடர்கள்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்தது. அப்போது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஐபேக் நிறுவனமும், பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகமும் தான். அதன்பிறகு இவரது புகழ் தேசிய அளவில் பரவியது. இவரை சுருக்கமாக பி.கே அழைக்க தொடங்கினர். தேர்தல் வியூக நிறுவனங்கள் தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரச்சார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள … Read more

Nagma: அடக்கடவுளே… சூர்யா மச்சினிச்சி கிட்டேயே அந்த வேலைக்காட்டிய ஆள்…

காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நக்மா. இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த நக்மா முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். பின்னர் தனது அடுத்த படமாக நடிகர் ரஜினிகாந்தின் பாஷா படத்தில் நடித்தார். இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ப்ச்… அந்த கொடுப்பனை இல்ல… பாவம்தான் தனுஷ்! தொடர்ந்து சரத்குமார், சத்யராஜ், கார்த்தி என பிரபல நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் நக்மா. நக்மா … Read more

மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தனக்கு கடன்வழங்கிய இந்தியா சீனா உட்பட அனைத்து முக்கிய நாடுகளிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களை இதுவரை பெற்றுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாணயநிதியம் ஏப்பிரல் 20ம் திகதி இலங்கைக்கான நான்குவருட நிதிஉதவி திட்டத்திற்கு அனுமதி வழங்கவுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  சர்வதேச ஊடகமான ரொய்ட்டருக்கு வழங்கிய செய்தியியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில், சர்வதேச நாணயநிதியம் ஆறுமாத்திற்கான முழுமையான பிணையெடுக்கும் பொதி குறித்து … Read more

Madras HC: தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கலாமா? 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்

சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காக திரிபுவன சக்கரவர்த்தி சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகந்நாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தொன்மையான தெய்வீக மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த போதும், துரதிருஷ்டவசமாக அது நடைமுறைக்கு வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி வளர்ச்சிக்காக காசி தமிழ் சங்கமம் … Read more

Viduthalai: ` 12 நாள்ல ரூ.4 கோடி செலவு; ரயில் செட்; மலை மேல ஷூட்' – மேக்கிங் குறித்து வெற்றி மாறன்

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள `விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் இந்த மாதம் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியிருந்தனர். `விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்தில் உயிரிழந்தவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு படத்தின் டிரெய்லர் … Read more

ஒன்றரை ஆண்டுகள்… காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர்

ஈரானில் மாயமாகியுள்ள தமது மகளை கண்டுபிடிக்க உதவுமாறு பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் தந்தை கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் ஈரானுக்கு சென்ற அவரது மகள் ஒன்றரை ஆண்டுகளாக நாடு திரும்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார். @Global News 35 வயதான Behnoush மற்றும் அவரது துணை Mathew Safari ஆகியோர் தெஹ்ரான் சென்ற நிலையில் மாயமாகியுள்ளனர். 2021 நவம்பர் மாதம் அந்த தம்பதி கனடாவில் … Read more

’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி! காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும், ’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. நவின டிஜிட்டல் உலகம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு டிஜிட்டல் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.  அதுபோல டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளிலும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக, பூக்கும் வியாபாரி உள்பட அனைத்து தரப்பினரும் இணையதள பண பரிவர்த்தனையேயே விரும்புகின்றனர். … Read more

திருவாரூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கிராமத்தினர் உத்திரகிரி மற்றும் படத்திறப்பு பத்திரிகையை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராமத்தினர் யாசகமெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து … Read more

'பயணிகள் துறை', 'புகார் தீர்வு உதவி எண்', 'பொது இணையதள வசதி' ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ‘பயணிகள் துறை’, ‘புகார் தீர்வு உதவி எண்’, ‘பொது இணையதள வசதி’ ஆகிய திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பள்ளன் இல்லத்தில் உள்ள மையத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் 1800 599 1500 என்ற இலவச எண் மூலம் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.