2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் எனவும், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தங்களின் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காக நான் சமீபத்தில் ஒரு அதிகரிப்புக்கு அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து அதற்கான அங்கீகாரத்தைம் பெற்றேன். … Read more

அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார் ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அகமதாபாத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார். இரு பிரதமர்களும் டாஸ் போடும் நிகழ்வில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தபின், வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை செல்கிறார். முன்னதாக, அகமதாபாத் வந்த அந்தோணி அல்பனீஸ் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். ராஜ்பவனில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். Source link

கண்ணி வெடிகளில் சிக்கி தெறிக்கும் ரஷ்ய டாங்கிகள்: பரபரப்பு வீடியோ காட்சி

போரில் ரஷ்ய படைகளின் பீரங்கி டாங்கிகள் உக்ரைனிய படைகளின் கண்ணி வெடிகளில் மோதி வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. பக்முட் நகரம் ஓராண்டு நிறைவை முன்னிட்டு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர், முக்கிய கிழக்கு உக்ரைனிய  நகரான பக்முட்-ஐ தற்போது சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில்  முற்றுகையிடப்பட்டுள்ள பக்முட் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றினால், அவை கிழக்கு உக்ரைனுக்குள் நுழைய “திறந்த பாதை” இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி … Read more

இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களவை குழுக்களில் துணைஜனாதிபதி ஊழியர்கள்: மரபு மீறல் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களவை குழுக்களில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் அலுவலக ஊழியர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மரபு மீறல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மக்களவை, மாநிலங்களவையில் உள்ள பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களாக எம்பிக்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பை அந்தந்த அவையின் செயலாளர்கள் அவைத் தலைவர்களின் ஒப்புதலுடன் வெளியிடுவார்கள். தற்போது மாநிலங்களவையின் தலைவராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளார். சமீபத்தில் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை குழுக்களில் … Read more

புதுச்சேரி போத்தீஸில் மகளிர் தின விழா| Womens Day Celebration at Puducherry Bodhisattva

புதுச்சேரி: புதுச்சேரி போத்தீசில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பொது மக்களுக்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் புதுச்சேரி போத்தீஸ் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி, போத்தீஸ் பெண் ஊழியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலைக்கழக விரிவுரையாளர் உமா சந்திரசேகர் பங்கேற்று, பெண்களுக்கான நிதி மேலாண்மை, மகிழ்வோடு வாழ்தல் ஆகியவற்றை விளக்கி, பெண் வாழ்வியலை மேம்படுத்துதல் பற்றி கூறினார். பெண் ஊழியர்களுக்கான உணவு உண்ணுதல், பலுான் உடைத்தல் … Read more

அமெரிக்க மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி நியமனம்| Appointment of Indian origin as US District Judge

வாஷிங்டன், அமெரிக்காவின் மாவட்ட நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியன், 43, நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் பணி நிமித்தமாக, அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் நகருக்கு பல ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்தனர். கடந்த 1979ல் அருண் சுப்பிரமணியன் அமெரிக்காவில் பிறந்தார். இவர், 2001ல் ‘கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ்’ பல்கலையில் பி.ஏ., பட்டம் பெற்றதுடன், 2004ல் கொலம்பியா சட்டப் பள்ளியில், ஆராய்ச்சிக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் – தெற்கு மாவட்டத்திற்கு நீதிபதியாக இவரை நியமிக்க, அமெரிக்க செனட் … Read more

திண்டுக்கல்லில் பரபரப்பு.! காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி.!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதலனை பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலில் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கண்ணுமேய்க்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் மகேஸ்வரி(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து முத்துக்குமார், மகேஸ்வரிடமிருந்து பணம் மற்றும் நகைகள் வாங்கி இருந்த நிலையில், மகேஸ்வரி … Read more

தமிழகம் முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் நாளை சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆயத்தப் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் வரும் 10-ம்தேதி (நாளை) சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் … Read more

ஹோலி கொண்டாட்டம் இல்லை – முதல்வர் கேஜ்ரிவால் 7 மணி நேரம் தியானம்

புதுடெல்லி: நாட்டின் நலனுக்காக ஒரு நாள் தியானத்தை கடைபிடிப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்த அவர் நேற்று காலை 10 மணிக்கு தனது 7 மணி நேர தியானத்தை தொடங்கினார். அதற்கு முன்பாக, ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் முன்னேற்றம் கருதி நேற்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்து தியானத்தில் ஈடுபட்ட டெல்லி முதல்வர் … Read more