கருத்து வேறுபாடு மறந்து மருத்துவமனையில் பாலாவை சந்தித்த உன்னி முகுந்தன்

பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும் தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூ.,வில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது அண்ணன் சிவா விரைவில் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்திக்க இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மலையாள நடிகர் உன்னி … Read more

நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு பொனி ஹோர்பக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் (மார்ச் 07) சந்தித்தார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் நெதர்லாந்து தூதுவருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்  இடம்பெற்றது. இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் மேம்படுத்துத்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மகளிர் தின ஸ்பெஷல்.. பெண் காவலர்களுக்கு விடுமுறை.. காவல் ஆணையர் உத்தரவு.!

இன்று (மார்ச் 8ம் தேதி) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  இதனையடுத்து இன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களை கொண்டாடும் வகையில் இன்றைய … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி இடையே வாக்குவாதம்… கீழே தள்ளி விட்டு கொன்ற தமிழ்நாட்டை சேர்ந்த நபர்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மங்களூரு சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் மலபார் எக்ஸ்பிஸ் ரெயிலில் பயணித்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மோதல் முற்றியதில், சக பயணியை ஒருவர் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்ட பகுதியை … Read more

பாஜக ஐடி விங் கூண்டோடு ராஜினாமா..!!

தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இந்த நிலையில் திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதேபோல பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகினார். இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இது பாஜகவில் பெரும் … Read more

High Seas Treaty: உயிர்பெற்ற பெருங்கடல் பாதுகாப்புக்கான ஒப்பந்தம் – இதன் முக்கியத்துவம் என்ன?

சுமார் 195 நாடுகள் பங்கெடுத்துக்கொண்டு 38 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதில், மார்ச் 3ம் தேதியன்று நியூயார்க்கில் ‘High Seas Treaty’ என்று அழைக்கப்படும் கடல் ஒப்பந்தம் இறுதி வடிவத்துக்கு வந்திருக்கிறது. இப்போது நடந்து முடிந்திருப்பது இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே. 2004ம் ஆண்டிலிருந்தே இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அதற்குப் பத்து ஆண்டுகள் முன்பிருந்தே இப்படி ஓர் ஒப்பந்தம் வேண்டும் என்றும் உலக நாடுகள் குரல் எழுப்பி வருகின்றனவாம்! ஆறு சுற்றுகளுக்குப் பிறகு ஒருவழியாக உலக நாடுகள் ஒருமித்த … Read more

சர்வதேச மகளிர் தின விழா: பலூன்களை பறக்கவிட்டு மகளிர் தினத்தை கொண்டாடிய மாணவிகள்!

சர்வதேச மகளிர் தினவிழாவை ஒட்டி, புதுச்சேரி கடற்கரையில் பெண்களின் உடல்நலத்தை பேணும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டதோடு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு, மகளிர் தினத்தை கொண்டாடினர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண் அரசு ஊழியர்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பெண் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பெண்களின் பெருமையை பறைச்சாற்றும் வகையில் வண்ண கோலமிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற … Read more

வண்ணம் பூசி தமிழகம் முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சென்னை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. அப்போது, ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர். சென்னையில் ஹோலி பண்டிகை இன்று (மார்ச் 8) முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹோலி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை பகுதியில் காலை 8 மணி முதல் வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம் பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட … Read more