மும்பை அருகே கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கடற்படை ஹெலிகாப்டர்: 3 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: இந்திய கடற்படைக்குச் சொந்தமான உள்நாட்டு தயாரிப்பான மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) இன்று (புதன்கிழமை) அவசரமாக மும்பை கடற்கரையில் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தங்களின் வழக்கமான பயணத்தில் இருந்த ஹெலிகாப்டர் அவசரமாக கடலில் தரையிரக்கப்பட்ட போது, அவை மும்பை கடற்கரைக்கு அருகில் இருந்தன. அதனால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து த்ருவ் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரும் கடற்படை ரோந்து கப்பல் … Read more

வெப்பத்தை தணிக்க வரும் மழை: வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!

பனிப்பொழிவு குறைந்து நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. மார்ச் மாதமே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் கோடை வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலில் காய்ந்து வரும் மக்களுக்கு நற்செய்தியாக மழை பற்றிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதிலும் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 11ஆம் தேதி (சனிக் கிழமை) வரை லேசானது முதல் மிதமான மழைக்கு … Read more

Sai Pallavi: புஷ்பா 2ல் இணைந்த சாய் பல்லவி… அப்போ அது அவருக்குதானா?

கடந்த 2021ஆம் ஆண்டு பேன் இந்தியா படமாக வெளியாகி வசூலை குவித்த படம் புஷ்பா தி ரைஸ். தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ், அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் புஷ்பாநடித்திருந்தனர். Amala Paul: சூர்யா பாடலுக்கு கவர்ச்சி உடையில் செம்ம ஆட்டம்… அமலா பாலின் ஹோலி வாழ்த்து! நடிகை சமந்தா ஊ … Read more

இங்கிலாந்துக்கு அகதிகள் வருவதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றும் இங்கிலாந்து அரசு!

இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வருபவர்கள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர் அல்லது ருவாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவர் என பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். 2021ஆம் ஆண்டு, பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு படகுகள் மூலம் 28,000 பேர் அகதிகளாக வந்த நிலையில், கடந்தாண்டு, அந்த எண்ணிக்கை 45,000 ஆக அதிகரித்தது. அகதிகள் வருவதை தடுத்து நிறுத்தும் சட்ட மசோதா, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டவிரோதமாக வருபவர்கள் மனித உரிமை சட்டங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு, இங்கிலாந்தில் தஞ்சமடைய முடியாது … Read more

திருட்டுத் தனமாக காருக்கு சார்ஜ் போட்ட நபர்: அபராதத்தைக் கட்ட சொன்ன அரசாங்கம்!

அவுஸ்திரேலியா நாட்டில் பொது மின்சாரத்தைப் பயன்படுத்தி தனது மின்சார வாகனத்திற்கு டாப் அப் செய்த நபரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்து அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. பொது மின்சார திருட்டு அவுஸ்திரேலியாவின் தெற்கு பெர்க் மாகாணத்தைச் சேர்ந்த பார்கர் எனும் நகரத்தில், அரசாங்கத்தின் மின்சாரப் பெட்டியிலிருந்து மின்சாரத்தைத் திருட்டுத் தனமாக எடுத்து, தனது வாகனத்துக்கு சார்ஜ் போட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.78 வயதான அந்த நபர் காருக்கு சார்ஜ் போடுவதை சிசிடீவி … Read more

மும்பையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை ஹெலிகாப்டர் திடீர் விபத்து

மும்பை: மும்பையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை ஹெலிகாப்டர் திடீர் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த பைலட்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்கரை  பகுதியில், கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள், ரோந்துபடகுகள், கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், இன்று காலை வழக்கமான  ரோந்து பணியியில் ஈடுபட்டு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திடீர் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது சிறு … Read more

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம்..!!

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். தன்னை விடுவிக்கவோ அல்லது வெளிநாடு செல்லவோ அனுமதி அளிக்கக் கோரி ராபர்ட் பயஸ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொதுநல வழக்குகளை எச்சரிக்கையோடு விசாரிக்க வேண்டியுள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: பொதுநல வழக்குகளை எச்சரிக்கையோடு விசாரிக்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட விரோதத்துக்காக பழிவாங்க, கெட்ட நோக்கத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதா? என பார்க்க வேண்டியுள்ளது என நீதிபதிகள் கூறினர். கா ளையார்கோவில் புது குடியிருப்பு கிராம தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீதான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மும்பை கடல்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், அவசரமாக கடலில் இறங்கியது

மும்பை: இந்திய கடற்படைக்கு  சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக கடலில் இறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டநிலையில் கடலில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து ,தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பில்  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி மிகவும் பொருத்தமான திகதி என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.