தர்மபுரி அருகே பரிதாபம்.! கார் மோதி தந்தை-மகள் பலி..!!

தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தனது 9 வயது மகள் ஸ்ரீஜாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நாகனம்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராஜா மற்றும் அவரது மகள் … Read more

சாத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசிமக பிரம்மோற்சவம்; தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்ரீசுப்பிரமணியசாமி திருக்கோயிலில் மாசிமகம் பிரம்மோத்ஸ்வத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 25 – ம் தேதி தொடங்கிய விழா தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்றது. இந்தத் திருவிழா நாள்களில் தினசரி சுவாமி திருவீதி உலா கண்டருளினார். தினத்தோறும் காலை, மாலை யாகசாலை, அஸ்திரதேவர் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாசி மகம் திருவிழாவின்‌ முக்கிய நிகழ்வான‌ சிவப்பு மற்றும் பச்சை, வெள்ளை சாத்து நிகழ்வுகளில் உற்சவர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சிறப்பு … Read more

நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தார். பாஜக, அதிமுகவிடையே கூட்டணி உள்ள நிலையில், பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி, அதிமுகவில் … Read more

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி வரும் 10 ம் தேதி டெல்லியில், ஆர்ப்பாட்டம் நடத்த கவிதா தயாராகி வருகிறார். இந்த நிலையில் அமலாக்கத்துறை இந்த சம்மனை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நாளை தனது அமைச்சர்களுடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அமலாக்கத்துறையின் சம்மனுக்கு பதிலளித்துள்ள கவிதா, விசாரணைக்கு … Read more

மகளிர் தினம் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

சான் பிரான்சிஸ்கோ: ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை … Read more

மு.க.ஸ்டாலின்: பெரியார் இல்லாத கவலையும், திராவிட மாடல் அரசின் எழுச்சியும்!

சர்வதேச மகளிர் தினம் 2023ஐ ஒட்டி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி சிறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முதல்வர் தலைமை வகித்தார். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்ச் 8ன் சிறப்பு இந்த விழாவில் … Read more

கர்நாடக தேர்தல் 2023: காங்கிரஸ், பாஜக கனவு டமால்… அமைகிறது தொங்கு சட்டமன்றம்?

தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு வரும் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆளும் பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹிஜாப் சர்ச்சை முதல் டெண்டர்களுக்கு 40 சதவீத கமிஷன் முறைகேடு வரை லிஸ்ட் பெரிதாகி கொண்டே செல்கிறது. மீண்டும் எடியூரப்பா இதனால் களம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. அதேசமயம் எடியூரப்பாவை மீண்டும் … Read more

Amala Paul: சூர்யா பாடலுக்கு கவர்ச்சி உடையில் செம்ம ஆட்டம்… அமலா பாலின் ஹோலி வாழ்த்து!

நீலத்தாமரா என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். தமிழ் சினிமாவில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். Bala health update: நடிகர் பாலா கவலைக்கிடம்… மருத்துவமனையில் குவியும் பிரபலங்கள்! மேலும் முன்னணி நாயகர்களான விஜய்யுடன் தலைவா படத்திலும், ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா … Read more

பொதுமக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினார். அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமண்டோவும், இந்த ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோயிலில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதையில் பொதுமக்கள் ஹோலியை கொண்டாடினர். Source link

அக்கா இறந்த சில நாட்களில் தங்கைக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சியில் பிரித்தானியக் குடும்பம்

பிரித்தானியாவில், அக்கா இறந்த சில நாட்களில் தங்கையும் உயிரிழந்த துயர சம்பவம் குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு மகள் இறந்த துக்கம் ஆறுவதற்குள்…  ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பர்கில், கடந்த மாதம் 12ஆம் திகதி Shaunie Thomson (26) என்னும் இளம்பெண் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். Shaunieஇன் மரணச் செய்தியால் கடுமையாக பாதிக்கப்பட்டார் அவரது தங்கையான Shavanna Thomson (21). இந்நிலையில், இம்மாதம், அதாவது மார்ச் 3ஆம் … Read more