தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

ஐதராபாத்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலஅரசை மிரட்டும் நோக்கில் மத்தியஅரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா,  தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதா  உள்பட 15 பேர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் விறகு அடுப்பு எரிய வைத்தும் விலை உயர்வுக்கு நூதனமான முறையில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்ற அத்தியாவசிய தேவைகளின் விலை வரலாறு காணாத அளவில் தினந்தோறும் ஏறிக்கொண்டே வருகிறது. … Read more

கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பது முட்டாள்தனமான செயல்: தமிழ்மகன் உசேன் கண்டனம்

சென்னை: கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பது முட்டாள்தனமான செயல் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். பழனிசாமி உருவப் படத்தை பாஜகவினர் எரித்தது முட்டாள்தனமான செயல் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கண்டனம் தெரிவித்தார். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது இயல்புதான்; அதில் எந்த தவறும் இல்லை. அண்ணாமலை தலைமையை விரும்பாதவர்கள் அதிமுகவில் இணைகின்றனர் எனவும் தமிழ்மகன் உசேன் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

குஜராத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. நிலஅதிர்வின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் பரிசளித்த ஜாக்கி ஷெராப்

'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட்' படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் ஆகியோருடன் ஹிந்தி நடிகரான ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் வராத இயக்குனர் நெல்சன் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இந்த எதிர்பாராத … Read more

நிதித் துறை நெருக்கடி முகாமைத்துவத்துக்கு  குழு, அமைச்சரவை அங்கீகாரம்

நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.   இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ;அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:    01. நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு தாபித்தல் அரச … Read more

2024 மக்களவை தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைபற்ற பாஜகவின் செயல் திட்டம்: இந்த மாநிலங்களுக்கு  கூடுதல் கனவம்  

2024 மக்களவை தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைபற்ற பாஜகவின் செயல் திட்டம்: இந்த மாநிலங்களுக்கு  கூடுதல் கனவம்   Source link

தந்தை, மகனை பாராட்டிய மோடி!!

நோட்டு புத்தகங்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவன் மற்றும் அவரது தந்தையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த மூத்த இதய நோய் வல்லுநர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகனும் மறுசுழற்சி மற்றும் கழிவுகளை பயனுள்ளவையாக மாற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், இதேபோன்ற முயற்சிகள் பற்றி அனைவரும் பகிரவேண்டும், அப்படி செய்தால் மறுசுழற்சி மற்றும் வீணாகும் கழிவுகளை பயனுள்ளவையாக மாற்றுவது பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படும் … Read more

குமாரபாளையம் காவிரி ஆற்றில் 100 வது பௌர்ணமி ஆரத்திப் பெருவிழா; திரளாகக் கலந்துகொண்ட பக்தர்கள்!

மாசிமகம்: குளித்தலை கடம்பனேஸ்வரருக்குக் காவிரியில் தீர்த்தவாரி வைபவம் – புனித நீராடிய பக்தர்கள்! நாமக்கல் மாவட்டம், ‘குமாரப்பாளையம் காவிரி குடும்பம் மற்றும் அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்புக் குழு’ சார்பில் பிரதி பௌர்ணமிதோறும் காவிரி ஆற்றில் ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றைத் தூய்மையாக வைத்திருக்கவும், மாசுபடாமல் காக்க வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ஆரத்தி விழா நடத்தப்படுகிறது. கடந்த 2014 – ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஆரத்தி விழா, தற்போது … Read more

ஹோலி எல்லோர் வாழ்விலும் ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ஹோலி எல்லோர் வாழ்விலும் ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநர் ரவி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் இந்த வண்ணமய திருவிழா எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்” இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் … Read more