#BigBreaking | விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசை வெளுத்து வாங்கிய நீதிபதி சுவாமிநாதன்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில், அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்று இருந்தது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி சுவாமிநாதன், விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க கோரியும் உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் தடையை நீக்க கோரி … Read more

“12,000 அடி உயர சந்தோஷம்!"-நான்கு பெண்கள்; ஒரு பயணம்… ஓராயிரம் அனுபவங்கள்!

அட்வென்ச்சர், டிரெக்கிங் என்றெல்லாம் சொன்னால் பலருக்கும் ஆண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். அதையும் மீறி பெண்கள் நினைவுக்கு வந்தாலும், அவர்கள் இளம் வயதினராகவே இருப்பார்கள். இந்தக் கருத்தை உடைக்கும் வகையில், 35 ப்ளஸ் வயதில் உள்ள பெண்கள், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 12,000 அடிகளுக்கும் மேலான உயரத்தில் உள்ள டோரியா தால் மற்றும் சந்திரஷீலா ஆகிய இரண்டு இடங்களுக்கு டிரெக்கிங் சென்று வந்துள்ளனர். தகவலைக் கேள்விப்பட்டதும் டிரெக்கிங் போன பெண்களைத் தேடிச் சென்றோம். டிரெக்கிங் சென்றவர்களில் ஒருவரான 43 … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், ஆளுநர் ஆர்.என். ரவி, ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதன் விவரம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் … Read more

காஷ்மீர் பண்டிட்டை கொன்றவர் உட்பட 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக் கொன்றவர் உட்பட 2 தீவிரவாதிகள் என் கவுன்ட்டரில் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் வசித்து வந்தவர் பண்டிட் சஞ்சய் சர்மா. வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றிய சர்மா, 26-ம்தேதி காலையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிரவாதிகளை தேடி வந்தனர். இந்நிலையில், புல்வாமா மாவட்டம் பட்கம்புரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் போலீஸாரும் … Read more

ஸ்டாலின் பேரை கேட்டதும் பயம்; ஸ்கூல் அட்மிஷன் கூட கிடைக்கல… கருணாநிதி விட்ட பளார்!

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க வாகனங்களில் அணிவகுத்து உடன்பிறப்புகள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இன்று காலை பெரியார் , அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரின் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சிறு வயதில் பள்ளி … Read more

Ajith: அஜித்தை உரிச்சு வச்சிருக்கும் மகன் ஆத்விக், தல மாதிரியே ஃபுட்பால் ரசிகன்: வைரல் வீடியோ

சென்னையின் எஃப்.சி. அணி விளையாடிய கால்பந்தாட்ட போட்டி சென்னையில் நடந்தது. அந்த போட்டியை காண தன் செல்ல மகன் ஆத்விக்கை அழைத்து வந்திருந்தார் ஷாலினி. ஆத்விக்கை சென்னையின் எஃப்.சி. அணி ஜெர்சியில் பார்த்த ரசிகர்களோ, குட்டி தல சென்னை டீமின் ரசிகரா என்றார்கள். தன் அம்மாவுடன் சிரித்த முகமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார் ஆத்விக். ஸ்டேடியத்தில் ஷாலினி மற்றும் ஆத்விக்கை பார்த்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வந்து அவர்களுடன் பேசினார். ஷாலினியுடன் பேசிய அபிஷேக் பச்சன் … Read more

வடகிழக்கு அமெரிக்க பகுதிகள், நியூயார்க் நகரங்களில் கடும் பனிப்பொழிவு

வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாசச்சூசெட்ஸ் மற்றும் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட் பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள் முழுவதுமாக வெண்பனியால் சூழப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் மொத்தமாக 1.8 அங்குலம் பனிப்பொழிவு பதிவாகி இருக்கும் நிலையில், வடகிழக்கு பகுதிகளில் 8 அங்குலங்கள் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் இந்த வாரம் முழுவதும் கடுமையான வானிலை நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது எம்.வி.கங்கா சொகுசுக் கப்பல்

எம்.வி.கங்கா சொகுசுக் கப்பல் அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது. இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரணாசியில் தொடங்கி, 6 மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தைக் கடந்து  தீப்ருகரை இந்த சொகுசுக் கப்பல் வந்தடைந்துள்ளது. சுமார் 3,200 கிலோமீட்டர் தூரம் கப்பலில் பயணித்த 28 வெளிநாட்டவருக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான குழுவினர் வரவேற்பு அளித்தனர். Source link

ரஷ்யாவுக்கு உதவினால்… சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உக்ரைன் போரில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அது உயிரைக் கொல்லும் பொருட்களை ரஷ்யாவுக்கு வழங்கினால் சீன நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஏற்கனவே சீனாவை எச்சரித்துள்ள அமெரிக்கா அமெரிக்க மாகாணச் செயலரான Antony Blinken சமீபத்தில் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தால் சந்திக்கவிருக்கும் பின்விளைவுகளைக் குறித்து ஏற்கனவே சீனாவை எச்சரித்துள்ளோம் என்றார். கிடைத்துள்ள தகவல் இந்நிலையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், இதுவரை சீன … Read more

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் பரிசு – ஆசிரியர்களுக்கு 3 முத்தான திட்டங்கள் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர் களுக்கான மூன்று முத்தான  திட்டங்களை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிறந்தநாள் பரிசாக ஆசிரியர்களுக்க 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி, அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் … Read more