நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது! குடியரசு தலைவர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் அனுப்பிய நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்து உள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டத. இதையடுத்து திமுக ஆட்சி பதவி ஏற்றதும்,  2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் … Read more

பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு: காரைக்காலில் கடைகள் அடைப்பு

காரைக்கால்: புதுச்சேரி அரசின் மின்துறை மூலம் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கண்டிப்பது, மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், குப்பை வரி ரத்து தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்கால் மக்கள் போராட்டக்குழு தெரிவித்திருந்தது. இதற்கு திராவிடர் கழகம், முஸ்லிம் லீக் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள், சில … Read more

சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

சென்னை: சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். லிங்குசெட்டி தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் லிப்டில் சிக்கி கீமாராம் என்பவர் உயிரிழந்தார். 4 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடத்தின் சர்வீஸ் லிப்ட்டில் பயணித்த கீமாராம், இரண்டாவது தளத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.சர்வீஸ் லிப்ட் கீழே இறங்கிய போது, ஒரத்தில் நின்று எட்டி பார்த்தபோது விபத்து என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உடலை மீட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனீக்களிடம் கொட்டு வாங்கியும் வலியுடன் தேர்வெழுதிய 50 மாணவர்கள்: ஒடிசாவில் அதிர்ச்சி!

கியோஞ்சர்: ஒடிசாவில் தேனீக்களிடம் கொட்டு வாங்கியும் அதே வலியுடன் 50 மாணவர்கள் தேர்வெழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வழக்கம் போல், மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் தேர்வு  மையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் இருந்து வெளியே வந்த தேனீக்கள் கூட்டம், தேர்வு மையத்திற்குச் சென்று 50-க்கும் மேற்பட்ட … Read more

’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ – ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!

Zoho இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில புகார்களை தொடுத்திருந்தார். குறிப்பாக ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தங்களின் மகனையும் கைவிட்டதாகவும், தனது நியாயமான பங்கைப் பெறுவதைத் ஸ்ரீதர் தடுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதை மறுத்து நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இந்தியாவில் பிறந்தவரான ஸ்ரீதர் வேம்பு, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு வாழ்ந்து, அங்கிருந்தபடியே ZOHO நிறுவனத்தை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு, … Read more

'மாவீரன்' படத்தின் பிஸ்னஸ் விபரம்

'மண்டேலா' படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பை படம் எட்டியுள்ளது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை … Read more

Shine 100 : நாளை.., புதிய ஹோண்டா 100 பைக் அறிமுகம்

ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஷைன் 100 அல்லது வேறு ஏதேனும் பெயருடன் வெளியாக உள்ள மாடலின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஸ்ப்ளெண்டர், HF 100, HF டீலக்ஸ், பிளாட்டினா பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விற்பனையில் உள்ள சிபி ஷைன் 125 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்ட்டிருக்கும் புதிய 100சிசி பைக் மைலேஜ் அதிகபட்சமாக 70 கிமீ எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோண்டா Shine … Read more

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி Source link

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

ஆன்லைன் ரம்மி நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழப்பு ஏற்பட்டதில் சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகன், ஒன்றரை வயது மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரகுவரன் என்பவரும் … Read more