Dhanush: ஆசைப்பட்டது தனுஷ், கிடைச்சது செல்வராகவனுக்கு: காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Dhanush, Selvaraghavan: தனுஷ் ஆசைப்பட்டது செல்வராகவனுக்கு கிடைத்திருக்கிறது என ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ​ஐஸ்வர்யா ரஜினிகாந்த்​தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்கி வருகிறார். லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காரைக்குடியில் நடந்து கொண்டிருக்கிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் படத்தில் மேலும் ஒரு பிரபலம் சேர்ந்திருக்கிறார். ​செல்வராகவன்​லால் சலாம் படத்தில் செல்வராகவனை முக்கிய … Read more

சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!

சென்னை ஐஐடி வளாகத்தில் அவ்வப்போது மர்மமான தற்கொலைகள் நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ஐஐடியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். அவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால் … Read more

2023 ஏற்படபோகும் பேராபத்து! உலகமே முடங்கும்.. பாபா வங்காவின் கணிப்பு

பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார். 1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார்.  வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன. குறிப்பாக இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் அப்படியே … Read more

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது!

திண்டிவனம்: விழுப்புரம் அருகே திண்டிவனத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்,  தடை மீறி வந்த ராஜாவை,  பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பாஜக தேசிய செயலாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த … Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் இறையூர் மக்கள் முற்றுகை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இறையூர் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின மக்கள் வசிக்கும் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்டது . இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி இறையூர் கிராமத்தை சேர்ந்த மாற்று சமூக சிறுவர்கள் 3 பேரின் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 5 டிப்பர் லாரிகள், 3 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை 3 மடங்கு அதிகரிப்பு: அறக்கட்டளை நிர்வாகி தகவல்.!

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு முதற்பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், ‘ராமர் கோயிலுக்கான நன்கொடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், திருப்பதி பாலாஜி கோயிலைப் போலவே இங்கும் தினமும் நன்கொடையாக பெறப்பட்ட தொகையை கணக்கிட வேண்டிய நிலை ஏற்படலாம். வழக்கத்திற்கு மாறாக ரொக்க நன்கொடைகள் மூன்று … Read more

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண்: சாதனை படைத்த முதல் பெண் ஓட்டுநர்| Asia’s first woman loco pilot now runs Vande Bharat Express

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்குரிய சுரேகா யாதவ் என்ற பெண், வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேகா யாதவ். இவர், கடந்த 1988 ம் ஆண்டு, ரயில்வே ஓட்டுநரானார். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 1989 ல் … Read more

துரத்தப்பட்ட யானை குட்டிகளை தேடும் முயற்சியில் ஆஸ்கர் விருது பட நாயகன்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 95வது ஆஸ்கர் விருது பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் விருது கிடைத்தது. இன்னொரு பக்கம் 'தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்கிற டாக்குமென்ட்ரி படத்திற்கும் சிறந்த டாக்குமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். முதுமலை யானைகள் பராமரிப்பு முகாமில் அனாதையாக வந்த ரகு மற்றும் பொம்மி என்கிற இரண்டு யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் … Read more

சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரிக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

ராஞ்சி, முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற ஜார்கண்ட் மாநிலத்தில், சட்டவிரோதமாக ரூ.1000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து ஊழல் அரங்கேறி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அருண் இலக்காவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. … Read more