இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸி. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்..?
மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 4வது போட்டி டிரா ஆனது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போடிக்கு முன்னேறியது இந்தியா. … Read more