பஜாஜ் பல்சர் NS160, NS200 விற்பனைக்கு வந்தது

புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 மற்றும் NS200 என இரு பைக்குகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு முக்கிய அம்சங்களையும் பெற்றுள்ளது. முன்பாக பயன்படுத்தப்பட்டு வந்த டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு சிறப்பான சஸ்பென்ஷனை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி என்ஜின் உட்பட டிசைன் அம்சங்களில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. பஜாஜ் பல்சர் NS160, NS200 NS160 … Read more

போதை மாத்திரைகளுடன் சிக்கிய சிவில் இன்ஜினியர்

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் இன்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இந்த போதை மாத்திரையை பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இலக்கு வைத்து இந்த போதை மாத்திரை ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி … Read more

மின்கம்பியில் தென்னை மட்டை விழுந்த தகராறு.. கொடூரமாக கொன்ற 66 வயது மூதாட்டி உள்ளிட்டோர் கைது.!

சிவகங்கை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை அரங்கேறி இருக்கும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீரவலசை எனும் கிராமத்தில் முத்து விஜய் மற்றும் முனியசாமி என்ற இருவரும் அருகருகே இருந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில், மின் கம்பி மீது தென்னை மட்டை விழுந்த காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அண்டை வீட்டுக்காரர்களான இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், முத்து விஜய் தனது மகன் … Read more

நேற்று பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ?

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வான தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ, மாணவிகளில் 49,559 பேர் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத … Read more

“கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை!" – முதல்வர் விமர்சனத்தின் பின்னணி என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தலைப்பில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துவருகிறார். அதில் சமீபத்தில் ஒருவர், “கவர்னர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்திருக்கிறதே… கவர்னர்கள் இதற்குச் செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் இந்தக் கேள்விக்கு, “இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என்று முதல்வர் பதில் சொல்லியிருந்தார். சமீபகாலமாகவே … Read more

வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி கிராமமக்கள் முற்றுகை போராட்டம்..!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மனித கழிவு கலக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டியை உடைக்க முயன்றதை கண்டித்தும், ஒரு சில அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கிராமத்தில் பதற்றம் ஏற்படுத்துவதை தடுக்க வலியுறுத்துதியும், போராட்டம் நடத்தும் கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Source link

பிளஸ் 2 தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்குக: அன்புமணி

சென்னை: “பிளஸ் 2 தமிழ்ப் பாடத் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சி அளிக்கிறது: கலந்தாய்வு மூலம் அச்சத்தைப் போக்கி தேர்வு எழுதச் செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை … Read more

லண்டனில் இந்தியாவை அவமதித்த விவகாரம்: ராகுல் மன்னிப்பு கேட்க பாஜகவினர் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்துவிட்டார். நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என கூறியுள் ளார். எனவே அவரது கருத்துக்கு இந்த அவையில் உள்ள உறுப் பினர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோருமாறு ராகுல் காந்தியை வலியுறுத்த வேண்டும்” என்றார். ராஜ்நாத் சிங்கின் … Read more

மீண்டும் ஏவுகணை சோதனை – தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா

சியோல்: கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஊடக தரப்பில் “கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை பற்றிய கூடுதல் தகவல் இதுவரை தெரியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரத்தில் இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க – தென்கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், … Read more