வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் முதன்முறையாக ஓட்டுநர் பணியில் சுரேகா யாதவ் என்ற பெண் நியமனம்.!

மும்பை: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் முதன் முறையாக சுரேகா யாதவ் என்ற பெண் ஓட்டுநர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் விரைவு ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஓட்டுநர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இதன்படி, மும்பையில் இருந்து புனே, சோலாப்பூர் வழியே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியாற்றுவார். … Read more

விவேக் பற்றி ஏஆர் ரஹ்மான் திடீர் நினைவுப் பதிவு ஏன்?

தமிழ் சினிமாவில் சந்தானம் காலத்திற்கு முன்பு தமிழ் சினிமா நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தவர் மறைந்த நடிகர் விவேக். அவருடைய படங்களில் பல சமூகக் கருத்துக்களை நகைச்சுவை கலந்து சொல்லியவர். நேற்று ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நாளில் திடீரென விவேக் பற்றிய ஒரு நினைவுப் பகிர்வை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். அதிலும் யாரோ ஒரு அஜித் ரசிகர் விஜயகாந்த், விவேக் நடித்த 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' படத்தின் … Read more

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் தோப்புக்கான சடாய் தெரு பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சேட்டு. இவருடைய மனைவி பானுமதி (32). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவியுடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சேட்டு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு எதுவும் தெரியாததுபோல் வீட்டிலிருந்து வெளியே … Read more

#BIG NEWS : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு : பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் மறுப்பு..!!

தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் இந்தி மொழியைப் பேசுவதற்காகத் தாக்கப்படுவதாக கடந்த வார மத்தியில் இருந்து வதந்திகள் பரப்பப்பட்டன. சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் பிரபல நாளிதழ்களே இது தொடர்பான உண்மைத் தகவல்களை சரிபார்க்காமல் அதை செய்தியாக வெளியிட்டன.இது, தமிழ்நாடு – பிகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பரவவிடப்பட்ட இந்த வீடியோக்களின் காரணமாக இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் பரவியது. பலர் … Read more

பெரும் சோகம்..!! பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய +2 மாணவி சகோதரனுடன் பலி…!!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாழக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் விஷாலி (17). இவர், அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். நேற்று தொடங்கிய ப்ளஸ்-2 தமிழ் தாள் தேர்வு எழுத விஷாலி பள்ளிக்கு வந்தார். தேர்வு எழுதி விட்டு மீண்டும் அடுத்த தேர்வுக்காக தொடர்ந்து அதே பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். நேற்று மாலை விஷாலியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த அவருடைய சித்தப்பா … Read more

அமலாக்கத்துறை ரெய்டு: “திரும்பத் திரும்ப ஒரே ஸ்க்ரிப்ட்… இயக்குநரை மாற்றுங்கள்!" – தேஜஸ்வி சாடல்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், 2004-2009 வரை ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி, பாட்னா, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் லாலுவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்குகளில் ரூ.600 கோடி அளவிலான சொத்துகள் கைமாறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த … Read more

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சென்னை உயர் நீ திமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘வேலூரில் உள்ள பெருமுகை ஊராட்சியின் அரும்பருத்தி பகுதியில், பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 1 மீட்டர் ஆழத்தையும் தாண்டி, அதிகமாக மணல் … Read more

ரூ.15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை

புதுடெல்லி: இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணைகளை தயாரிக்க 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கின. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படுகிறது. இதன் உற்பத்தி ஆலை ஹைதராபாத்தில் உள்ளது. உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது. புதிதாக உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் … Read more