'எனது மகன், சகோதரன், குடும்பம் நீ!' – லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்து சொன்ன சஞ்சய் தத்!

காஷ்மீரில் ‘லியோ’ படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தை போல் இல்லாமல், 100 சதவீதம் தனது பாணியில் இந்தப் படம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் … Read more

புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 8 ஆண்டுகளில் ரூ. 18 லட்சம் கோடி உயர்வு| Nirmala Sitharaman accepts less cash economy is still a dream

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி 31.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: கடந்த 2014ல் நாட்டில் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது. இது, 2022 மார்ச் மாதத்தில் 31.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. … Read more

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு அதிக கவனத்தை ஈர்த்த 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்'

கார்த்திக் கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி குறும்படம், 95வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான' விருதை வென்றது. அந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்ற பிறகுதான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்படம் வெளியானது. வழக்கம் போல அதையும் ஏதோ ஒரு குறும்படம் என்றுதான் சிலர் நினைத்தார்கள். ஆனால், ஆஸ்கர் விருதை வென்ற பிறகு அந்தப் படம் பற்றிய தகவல்களும், செய்திகளும், … Read more

பிடியில் சிக்காமல் போக்கு காட்டும் இம்ரான்: கைது செய்ய நீதிமன்றம் தடை| Islamabad court restrains arrest of Imran Khan till March 16 for showing water to police

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூங்கா ஒன்றில் நடந்த பேரணியில், நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு, எதிராக ஜாமினில் வெளி வர முடியாத ‘வாரன்ட்’ பிறப்பித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இம்ரான் கான் … Read more

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்

இலங்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். சர்வதேச நடைமுறைக்கு அமைவாக அவர்களுக்கும் குடிமக்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் வழங்கி பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய … Read more

அரியலூரில் பிளஸ்1 தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

அரியலூரில் பிளஸ்1 தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு Source link

தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் சூர்யா 42-ன் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன்முறையாக நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா 5 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். இப்படத்தை 2024-ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் விளம்பர வீடியோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. மேலும் ஏப்ரல் 14-ல் இந்த … Read more

பிரஸ் மீட்: கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள்; பாதியில் வெளியேறிய அமெரிக்க அதிபர் – என்ன நடந்தது?

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, வார இறுதியில் இரண்டு பெரிய அமெரிக்க வங்கிகளின் சரிவு தொடர்பான தன் இறுதி அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் “வங்கிகள் சரிவை சந்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, என்ன நடந்தது என்பது குறித்து தற்போது விளக்கமாக கூறமுடியுமா? … இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உங்களால் … Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த நாகை இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த நாகை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நாகையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராமச்சந்திரன், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை … Read more

''நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்…'' – ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்

அரியலூர்: அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்துக்கு அனிதா பெயர் சூட்டப்படுவதால் கல்வி பயில வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இருந்த எதிர்ப்பு குறித்து அறிந்து கொள்வார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார். … Read more