பயங்கர ரயில் விபத்து எதிரொலி: கிரீஸில் வெடித்தது மக்கள் போராட்டம்

ஏதென்ஸ்: கிரீஸில் பயணிகள் ரயிலுடன், சரக்கு ரயில் மோதி 43 பேர் பலியான நிகழ்வு, அந்நாட்டு மக்களை போராட்டத்தில் இறங்க வைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் , எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து கிரீஸ் மக்களிடையே கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

ஈரோடு கிழக்கில் டெபாசிட் வாங்க எத்தனை வாக்குகள்? எந்தெந்த கட்சிகள் 'காலி’?

திருமகன் ஈவேரா திடீர் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது, 82 ஆயிரத்து 21 ஆண்கள், 87 ஆயிரத்து 907 பெண்கள், இதர வாக்காளர்கள் 17 பேர் வாக்களித்தனர். இதன்மூலம் மொத்தம் 1,69,945 வாக்குகள் பதிவாகியிருப்பது தெரியவருகிறது. டெபாசிட் தொகை ஒரு தொகுதியில் வேட்பாளர் போட்டியிடுவதற்கு உரிய டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். வெற்றி பெற்றால் டெபாசிட் தொகை … Read more

Angadi Theru Actress Sindu: இன்னொரு மார்புக்கும் கேன்சர் பரவிடுச்சு… என்னை கொன்னுடுங்க… கதறும் அங்காடித் தெரு நடிகை!

தன்னுடைய மார்புக்கும் புற்றுநோய் பரவி விட்டது என்றும் தன்னை விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்றும் அங்காடித் தெரு நடிகை சிந்து கதறியுள்ள வீடியோ இணையத்தை கலங்க வைத்துள்ளது. அங்காடித் தெரு சிந்துவசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அங்காடித் தெரு. இந்தப் படத்தில் அஞ்சலி, மகேஷ், பாண்டி என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகைசிந்து. அங்காடித் தெரு படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்தார் … Read more

ஆந்திராவில் நடைபெற்ற மகளிருக்கான கபடி போட்டியை துவக்கி வைத்து கபடி விளையாடிய அமைச்சர் ரோஜா

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜக்கையாய்பேட்டையில் நடைபெற்ற மகளிருக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்த அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, வீராங்கனைகளுடன் இணைந்து கபடி விளையாடினார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாவட்ட அதிகாரிகளுடனும் இணைந்து கபடி விளையாடி, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். Source link

உணவுப்பொருட்கள் விலை தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

பிரான்சில், இந்த மாதம் முதல் பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என துறைசார் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரான்சில் பிப்ரவரியில் நுகர்வோர் விலைகள் 6.2 சதவிகிதம் உயர்ந்தன. இந்நிலையில், இம்மாதம் முதல், உணவுப்பொருட்கள் விலை 10 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என தேசிய பல்பொருள் அங்காடிகள் அமைப்பு ஒன்றின் தலைவரான Jacques Creyssel என்பவர் எச்சரித்துள்ளார். எதனால் இந்த விலை உயர்வு? பொருட்களை பார்சல் செய்வதற்கு ஆகும் செலவு, ஆற்றல், எரிபொருள் மற்றும் கச்சாப்பொருட்கள் … Read more

9வது சுற்று: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 45ஆயிரம் வாக்குகள் முன்னிலை…

ஈரோடு:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70ஆயிரம் வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை, 9  சுற்று எண்ணப்பட்டு உள்ளது. அதிமுக வேட்பாளரை விட 45ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 397 தபால் ஓட்டுக்கள் பதிவாகி … Read more

மூணாறில் பிளாஸ்டிக் கழிவுகளால் மூழ்கும் முதிரைப்புழை ஆறு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மூணாறு: மூணாறில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் முதிரைப்புழை ஆற்றில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் நீராதாரம் சீர்கெட்டு வருகிறது. எனவே, ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறின் மையப்பகுதியில் முதிரைப்புழை ஆறு செல்கிறது. நல்ல தண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டலை ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் தான் மூணாறு நகராகும். இந்த நகருக்கு, தினசரி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 10வது சுற்றின் முடிவில் 28,637 வாக்குகள் பெற்றிருப்பதன் மூலம் அதிமுக  டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. டெபாசிட்டை தக்க வைக்க மொத்தம் பத்திவான 1,70,000 வாக்குகளில், 28,333 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

டெல்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்துள்ளார். ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் கள் கூட்டம் நடைபெறும் நிலையில் இருவரும் சந்தித்து உரையாடினர்.

”திமுக அரசுக்கான அங்கீகாரம் தான் இந்த வெற்றி” – ஈவிகேஎஸ் இளங்கோவன் புகழாரம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்; இந்த வெற்றி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினையே சேரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் முழுக்க முழுக்க தமிழக முதல்வர்தான். தமிழ்நாடு முதல்வரை தான் இந்த வெற்றியினுடைய பெருமை சென்று சேரும். திமுக அரசின் இருபது மாத ஆட்சிக்காலத்தில், கொடுத்த … Read more