Month: March 2023
ராணுவ உற்பத்தியை அதிகரிக்க இலக்கு| Aim to increase military production
புதுடில்லி, வரும் 2024 – 25ம் ஆண்டு, ராணுவ உற்பத்தியை 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் நேற்று ராஜ்யசபாவில் கூறியதாவது: நம் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உபகரணங்களை அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரிக்கின்றன. இந்த வகையில், கடந்த 2017 – 18ல் நம் ராணுவ உற்பத்தியின் மதிப்பு 54 ஆயிரத்து 951 கோடி ரூபாயாக இருந்தது. இது, … Read more
பாடசாலைப் புத்தகங்களுக்கான இந்திய ஆதரவு இலங்கையின் சிறந்த எதிர்காலத்துக்கான முதலீடு
இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் அச்சிடப்பட்ட பாடசாலைப் புத்தகங்களின் விநியோகப்பணிகளை இலங்கையின் கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோர் இணைந்து 2023 மார்ச் 09 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர். கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அ.அரவிந்த குமார் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் ரணசிங்கே உள்ளிட்ட அமைச்சின் சிரேஸ்ட … Read more
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு – ஒரே நேரத்தில் மூன்று ஆட்டோ ஓட்டுனர்கள் தற்கொலை முயற்சி.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக துடியலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், ஆனந்தகுமார் திமுக ஆதரவாளர் என்பதால் அவரையும் அவருடன் இருந்த மூன்று பேரையும் பாஜகவினர் இருக்கும் அந்த ஆட்டோ ஸ்டேன்டில் அனுமதிக்காமலும், ஆட்டோ ஓட்ட விடாமலும் ரகளை செய்துள்ளனர். இதனால், அவர்கள் மூன்று பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர். அதன் … Read more
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் : கோவை மாநகர காவல் ஆணையாளர் பேட்டி
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் : கோவை மாநகர காவல் ஆணையாளர் பேட்டி Source link
வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண்!!
வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண் சுரேகாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்பவர் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக வந்தே … Read more
“அதானி குறித்து கேள்வி எழுப்பினால் மைக் அணைக்கப்படுகிறது" – மல்லிகார்ஜுன கார்கே காட்டம்
கடந்த ஜனவரி 29-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். அதன்பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடந்து முடிந்தது. பிப்ரவரி 11-ம் தேதி முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் இரு அவைகளும் தற்போது கூடியுள்ளது. இரண்டாம் அமர்வு கூட்டத்தொடர் … Read more
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள், படகை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியகடிதத்தில், ‘‘நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு, … Read more
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு: மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
புதுடெல்லி: ஐஎஸ்கேபி தீவிவராதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 5 இடங்களில் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஐஎஸ்கேபி தீவிரவாதிகள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தங்களது அமைப்பை விரிவுபடுத்துவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்பினருடன் யாருக்காவது தொடர்பு உள்ளதா என அறிய நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள 4 … Read more