AK 62 Update: 'ஏகே 62' படம் குறித்து உதயண்ணா சொன்ன விஷயம்: அப்போ சம்பவம் கன்பார்ம்.!

‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப்படத்திற்கான அறிவிப்பை ரசிகர்கள் எப்போது வெளியிடுவார்கள் என வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ‘ஏகே 62’ படத்தின் இயக்குனர் மகிழ் என்பது கன்பார்ம் ஆகிவிட்டாலும் அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் உள்ளனர் படக்குழுவினர். கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கே … Read more

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22,000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்ட அந்நாட்டு மதத் தலைவர்

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22 ஆயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா ஆமினி என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு நீதித்துறை தலைவர்  விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ள நிலையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈரான் மதத் தலைவர் கொமேனி உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். … Read more

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்திக் கடந்த 7 நீச்சல் வீரர்- வீராங்கனைகள்

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 45 நிமிடங்களில்7 பேர் நீந்திக் கடந்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்த அவர்கள் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்தியவெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தனர். அவர்களுக்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு நீந்த துவங்கிய 7 பேரும் மாலை 3 -45 … Read more

மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரையும், வெற்றிலைகேணி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரையும் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

போர் தொடங்கிய பின் முதல் முறையாக ஜெலென்ஸ்கியுடன் பேசவுள்ள ஜி ஜின்பிங்!

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி ஜின்பிங் பயணம் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக தெரிவான ஜி ஜின்பிங், ரஷ்யா பயணத்தின் ஒரு பகுதியாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பரிசீலித்து வருகிறார். எனினும், அவரது முழுப்பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில், ஜெலென்ஸ்கியுடன் முதல் முறையாக ஜி ஜின்பிங் … Read more

விளையாட்டு பல்கலையில் அகில இந்திய தடகளம் போட்டி தொடக்கம்

திருப்போரூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழம் சார்பில், அகில இந்திய அளவிலான பல்கலை கழக அணிகள் பங்கேற்கும் தடகள போட்டி நடக்க உள்ளது. நேற்று துவங்கிய போட்டி, வரும் 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தியா முழுவதும் இருந்து 176 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 1800 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். … Read more

சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்!

பெய்ஜிங் : சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 3வது முறையாக சீன அதிபராக ஜின்பிங் பதவி ஏற்றார்; இந்நிலையில் புதினுடனான இந்த சந்திப்பு ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்துவதற்கான, அமைதி நடவடிக்கைக்கு உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு மணற்சிற்பம் வடிவமைத்து சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து!!

புவனேஸ்வர்: ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு மணற்சிற்பம் வடிவமைத்து சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் உலகில் அரங்கேறும் அனைத்து நிகழ்வுகள் தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். இதற்காக அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும் ‘தி … Read more

இரவானால் பனிப்பொழிவு.. பகலானால் கடும் வெயில்… – அவதிக்குள்ளாகும் சென்னைவாசிகள்!

சென்னையில் பகலில் கடும்வெயிலும், அதிகாலையில் பனிப்பொழிவும் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இன்று காலை பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். மார்ச் மாதம் வந்துவிட்ட போதிலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் தொடர்ந்தே வருகிறது. கடந்த ஒருவாரம் பனிப்பொழிவு குறைந்து இருந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் இருந்து 7 மணி வரை பனிமூட்டம் அதிகமாகவே இருந்தது. பனிப்பொழிவு காரணமாக நடைப்பயிற்சி, சைக்கிளிங் மேற்கொள்பவர்கள் … Read more