தமிழகத்தில் இன்று குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசிக் கொடை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு மாசி கொடை திருவிழா இன்று … Read more

நீட் தேர்வில் இருந்து விரைவில் விலக்கு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை கொட்டிவாக்கத்தில் கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கேரம் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது,நீட் விலக்கு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதற்கான பதிலை சட்ட வல்லுனர்களிடம் கேட்டுப் பெற்று முதல்வரின் … Read more

இந்த வார ராசிபலன்: மார்ச் 14 முதல் 19 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

யானையைக் கண்டு பயந்து பைக்குடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானையை பார்த்து பைக்கில் சென்ற முதியவர் தவறி கீழே விழுந்து உயிர் தப்பும் வீடியோ வெளியாகி உள்ளது. நேற்று மாலை திம்பம் மலையில் இருந்து தலமலை செல்லும் அடர்ந்த வனச்சாலையில்  பைக்கில் சென்ற  முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக தன் எதிரே யானை நிற்பதைக் கண்டார். இதனால் அச்சமடைந்த அவர் நிலை தடுமாறியதில் சாலையோர பள்ளத்தில் பைக்குடன் விழுந்தார். பின்னர் அந்த முதியவர் உடனடியாக … Read more

அதிக குற்றங்கள் நிகழும் லத்தீன் அமெரிக்கா போன்று தமிழகம் திமுகவினரால் மாற்றப்படுகிறது: அண்ணாமலை

சென்னை: அதிக குற்றங்கள் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்று தமிழகத்தை திமுகவினர் மாற்றிக் கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பொன்னேரி 17 வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, ஒரு குடும்ப பிரச்சினையில் தலையிட்டு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அடி வாங்கியவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் … Read more

ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு வனத்துறையினர் வாழ்த்து

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும். கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் யானைக்குட்டி ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்தது. வனத்துறையினர் இந்த குட்டியை மீட்டு, தங்கள் பராமரிப்பில் வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் பாகன் பொம்மன், கிருஷ்ணகிரி சென்று குட்டி யானையை பராமரித்து … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு! 18 வயது சிறுவன் மற்றும் இளம்பெண் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி..உயிர்தப்பிய குழந்தை

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு வடமேற்கு டல்லாஸில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த பொலிஸார், நான்கு பேர் உயிரிழந்து கிடந்ததை கண்டனர். பின்னர் அவர்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ட்டெமியோ மால்டோனாடோ என்ற 18 வயது இளைஞரும், அசுசீனா சான்செஸ் … Read more

பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி திருக்கோவில்

மலையாள மகாலட்சுமி கோயில் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. பணம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். அதே போன்று பெண்ணும் மகாலட்சுமி தன்மை நிறைந்தவள். எனவே பெண்கள் எங்கு சிறப்பாக வாழ்கிறார்களோ அங்கே லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர்களின் இருக்கும் இடத்திற்கே செல்கிறாள். அப்படி தன்னை வழிடும் மக்களுக்காக வந்திறங்கிய பள்ளிபுரம் அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோயில் சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். … Read more

வாலாஜாபாத் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

வாலாஜாபாத்: திருநெல்வேலி மாவட்டம், சிந்து பூந்துறை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர், தாம்பரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், விக்னேஷ் வாலாஜாபாத்தில் தங்கி பணியாற்றி வரும் சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக வாலாஜாபாத் – காஞ்சிபுரம் சாலையில் உள்ள மைதானத்திற்கு சென்றார். அப்போது, தனியார் பள்ளி அருகே காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி … Read more

மார்ச்-14: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.