ஐரோப்பா லீக் கால்பந்து – மான்செஸ்டர் யுனைடெட் – செவில்லா அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'

மான்செஸ்டர்,

ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – செவில்லா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் மார்செல் சபிட்சர் 14 வது , 21 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்க போராடிய செவில்லா அணி 84வது நிமிடம் , 90 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது.

இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தது. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.