தமிழகத்தில் கூடுதலாக உள்ள 37 சுங்கச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்கத் தலைவர் புதா அருள்மொழி, மாநில பொருளாளர் திலக பாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. … Read more

மேட்டுப்பாளையம் அருகே பாக்குத்தோப்பில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து யானைகள் அட்டகாசம்

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட புளியமர தோப்பு பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டு யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புளியமரத்தோப்பு பகுதியை சேர்ந்த கோவர்த்தனன் என்பவர் தனது தோட்டத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார். நேற்று … Read more

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!..

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி  பெங்களூரு அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

ராம நவமி ஊர்வலத்தில் மீண்டும் மோதல்.. பாஜக எம்எல்ஏ காயம்.. மே.வங்காளத்தில் பதற்றம்

India oi-Mani Singh S கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ராமநவமி ஊர்வலம் நடந்தது. இதில் மசூதி அருகே ஊர்வலம் வந்தபோது கூட்டத்தின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இதில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று இரவுக்குள் கைது செய்யப்பட வேண்டும் என்று மேற்கு வங்காள ஆளுநர் சிவிஆனந்த் போஸ் அறிவுறுத்தியுள்ளார். மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். … Read more

Athulya Ravi : அந்த வசீகரம் இல்லை.. ஏதோ மிஸ்ஸாகுது.. அதுல்யா ரவி போட்டோவை பார்த்து புலம்பும் பேன்ஸ்!

சென்னை : கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இளம் கதாநாயகியாக கோலிவுட்டை கலக்கினார் முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், கடாவர் படங்களில் நடித்த அதுல்யா இப்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை அதுல்யா ரவிக்கு படவாய்ப்பு இல்லாததால் படவாய்பை பெற இணையமே கதி என கிடக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். நடிகை அதுல்யா ரவி காதல் … Read more

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்; இ.பி.எஸ் சூசகம்

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்; இ.பி.எஸ் சூசகம் Source link

இறந்தும் வாழப்போகும் மதுரை பெண்! அடுத்தடுத்த சோகத்திலும் நெகிழ வைத்த இரு சம்பவங்கள்! 

மதுரை அருகே மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு, பலரின் உயிரை வாழவைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சமயநல்லூர் பகுதியை கார்த்திகா. சில ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரு மகன்கள், ஒரு மகளுடன் கார்த்திகா வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் தேனூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தபோது, கார்த்திகா விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறிப்பிட்ட காலத்திற்குள் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 31 ஆயிரம் வரியினங்கள், 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 12 லட்சம் காலிமனை இனங்கள், 311 கடை வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளன. நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலுவை வரிகள் அனைத்தும் சென்ற ஆண்டு வசூல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவை வரியையும் சேர்த்து நூறு சதவீதம் … Read more

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று முதல் முறையாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த அவருக்கு ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் மாவட்ட எல்லையிலும் மாவட்ட மையப் பகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை சுமார் 5 மணி அளவில் சேலம் மாநகர எல்லைக்கு வந்த அவருக்கு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது … Read more

நான்கு விக்கெட்டுகளை தூக்கி சாப்பிட்ட சாஹல்.! ஐதராபாத்தை தொம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்!

சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2023 ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஐதராபாத்தை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் நாணய சுழற்சியை வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க … Read more