விவசாயிகள் மனம் வைத்தால் போதும்… 242 கோடி மரங்கள் நடலாம் – காவேரி கூக்குரல் இயக்கம்!

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘பசுமை தொண்டாமுத்துர்’ திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் இன்று (ஏப். 2) நடைபெற்றது. மகத்தான காரியம் போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,”சத்குரு செய்வது ஒரு மகத்தான காரியம். அதில் சிபாகாவும் … Read more

வானில் பறந்த ஹாட் ஏர் பலூனில் திடீர் தீ விபத்து.. சுற்றுலா பயணிகள் 2 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!

மெக்சிகோவில், சுற்றுலா பயணிகள் சென்ற ஹாட் ஏர் பலூன் (Air Balloon) திடீரென தீப்பற்றி எரிந்ததில் இருவர் உயிரிழந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க டியோட்டிவாக்கான் நகரில் அமைந்துள்ள பிரமிட்களை வானிலிருந்து கண்டுகளிக்க டூர்-ஆப்பரேட்டர்கள் ஹாட் ஏர் பலூன்களை இயக்கிவருகின்றனர். வானில் சென்ற ஏர் பலூனின் பயணிகள் நிற்கும் கூடை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதில் பயணித்த ஆணும், பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்த நிலையில், ஏர் பலூனினிலிருந்து கீழே குதித்த சிறுவன் லேசான் தீக்காயங்களுடன் உயிர் … Read more

'சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்தேன்' 14,000 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர்பிழைத்த அவுஸ்திரேலிய பெண்!

பாராசூட் திறக்கத் தவறியதால் 14,000 அடி உயரத்தில் விழுந்து உயிர் பிழைத்த அவுஸ்திரேலிய பெண், தான் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்ததாக கூறியுள்ளார். சுவிட்சர்லாந்திற்கு விடுமுறைக்கு சென்றபோது எம்மா கேரி (Emma Carey) என்ற பெண் 2013-ல் சுவிட்சர்லாந்திற்கு விடுமுறைக்கு சென்றபோது ஸ்கை டைவிங் விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து குதித்து கீழே விழ ஆரம்பித்தார். ஆனால், அவரது பாராசூட் சரியாக திறக்கப்படாமல் படபடப்பதைப் பார்த்தபோது ஏதோ தவறாக நடந்துகொண்டிருப்பது அவருக்கு தெரிந்தது. அவளுடைய பயிற்றுவிப்பாளர் அவர்களின் பாராசூட்டை … Read more

வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன், வனத்துறையினர் ஆய்வு: வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

உடுமலை: தர்மபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லைகளில் மின்சாரம் தாக்கி காட்டு  யானைகள் இறந்ததை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்டத்தில் சோதனை பணிகளை  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் வனக்கோட்டத்தில் வன எல்லைப்பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலும் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும் சோலார் மின்வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப் படுகிறதா என்பதையும்  மின் வாரிய பணியாளர்களுடன் வனப்பணியாளர்கள் இணைந்து தொடர்ந்து சோதனையில் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உளள்து என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

‘பாரத் பந்த்’ போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சென்னையில் மரணம்

ஐதராபாத்: ‘பாரத் பந்த்’ போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா (வயது 88) இன்று சென்னையில் காலமானார். பிரபல டோலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா, சென்னையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், திரைத்துறை பிரபலங்களின் காஸ்ட்யூம் … Read more

அந்த இயக்குநர் விழாவில் பிரைட் நடிகர் முகமே ஃபியூஸ் போயிருந்துச்சாம்.. காரணம் அதுதானா?

சென்னை: தனக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை வாரி வழங்கிய இயக்குநரின் படத்திலேயே நடிக்க முடியாது என அந்த பிரைட் நடிகர் மறுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இனிமேல் அந்த இயக்குநருடன் பிரைட் நடிகர் கூட்டணியே வைக்க மாட்டார் என்றும் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதே இயலாத காரியம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது போல இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரேஞ்சுக்கு அந்த இயக்குநர் அழைத்ததும் நடிகர் அவரது … Read more

#BREAKING: ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு மரணம் ஆனால் இந்த முறை தற்கொலை அல்ல கொலை..!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரின் மகன்கள் முத்துராஜ் மற்றும் நல்ல தம்பி. இதில் நல்லதம்பி லாரி டிரைவர் வேலை செய்து வந்ததுடன் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன் தனது அண்ணன் முத்துராஜிடம் 3 லட்சம் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் முத்துராஜ் தனது தம்பி நல்லதம்பியிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். … Read more

ராம நவமி கொண்டாட்டத்தின்போது கலவரம்; பீகாரில் பதற்றம்! – அமித் ஷா கவலை

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில் சில மாநிலங்களில் வன்முறை, விபத்து சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, சசரம் மற்றும் பீகார் ஷெரிஃப் நகரங்களில் வகுப்புவாத வன்முறை வெடித்திருக்கிறது. இது தொடர்பாக 45 பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இரு நகரங்களிலும் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையில் வாகனங்கள், வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். சசரத்தில், மீண்டும் மோதல் வெடித்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த வன்முறையில் காயமடைந்தவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் … Read more