கோடையில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக தொடரப்பட்ட வழக்கு – சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.!

கோடையில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக தொடரப்பட்ட வழக்கு – சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.! திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியராஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “குழந்தைகள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  ஆனால், திருநெல்வேலியில் இயங்கி வரும் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் … Read more

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலந்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தன், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் அவரது மனைவி, தாயார், மகள், பேத்திகள் இருவர் மற்றும் தங்களது செல்லப்பிராணியுடன் கடப்பாக்கத்திற்கு சென்றுள்ளார். கடப்பாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் ஆலந்தூர்  திரும்பும்போது, கடும்பாடி – மணமை இடையே … Read more

’தொழிற்சங்க சொத்து விஷயத்தில் வைகோவின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது’ – சு.துரைசாமி விளக்கம்

திருப்பூர்: தொழிற்சங்க சொத்து விஷயத்தில் வைகோவின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளதாக, மதிமுகவின் மாநில அவைத்தலைவர் சு.துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக மதிமுகவின் மாநில அவைத்தலைவராக இருக்கும் சு.துரைசாமி, திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு மே 2-ம் தேதி நடந்த கூட்டத்தில் சங்கத்தலைவராக கோவை செழியன், பொதுச்செயலாளராக நானும், பொருளாளராக காட்டூர் கோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். கடந்த 63 ஆண்டுகளாக … Read more

மகாராஷ்டிர அரசியல் | மகா விகாஸ் அகாதி கூட்டணி உடையாது: உத்தவ் தாக்கரே

மும்பை: சரத் பவார் தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் மகா விகாஸ் அகாதி கூட்டணி உடையாது என்று அக்கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதையடுத்து, அம்மாநில அரசியலில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. சரத் பவாரின் இந்த முடிவை ஏற்க மறுத்துள்ள கட்சியினர், அவர் மீண்டும் தலைவராக வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனினும், அவர் … Read more

தானியங்கி மது விற்பனையை தடை செய்ய ஐகோர்ட் மறுப்பு… அரசின் வாதம் இதுதான்..!

தமிழ்நாட்டில் மது விற்பனையை மேலும் எளிதாக்க எந்திரம் மூலம் சென்னையில் தானியங்கி மது விற்பனை அறிமுகமாகியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு, மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். இதற்கு மத்தியில், தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்பனையை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட … Read more

Manobala: விவேக், மயில்சாமி, இப்போ மனோபாலா: சிரிக்க வைத்தவர்கள் எல்லாம் அழ வைக்கிறார்களே

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் Manobala comedy: படங்களில் நம்மை சிரிக்க வைத்தவர்கள் எல்லாம் அழ வைத்துவிட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். ​மனோபாலா​இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மே மாதம் 3ம் தேதி காலமானார். 69 வயதான மனோபாலா இறந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சிரித்த முகமாக இருந்ததுடன் அனைவரையும் சிரிக்க … Read more

உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் – 21 பேர் பலி

உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சித்ததாக உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கெர்சனில் உள்ள ரயில் நிலையம், பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தோடு, 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கீவ் மற்றும் ஒடேசா நகரங்களை தாக்க முயன்ற ரஷ்யாவின் … Read more

போரில் வெற்றி என்பது ஆயுத பலத்தால் வெல்வது! திடீரென நெதர்லாந்திற்கு சென்ற ஜெலென்ஸ்கி

நெதர்லாந்தில் சமாதானத்தை நெருங்கி, நீதியை மீட்டெடுக்க நாங்கள் வேலை செய்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து பயணம் ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எதிர்பாராத விதமாக நெதர்லாந்திற்கு சென்றார். அங்கு பேசிய அவர், உக்ரைன் தனது சொந்த மண்ணில் சண்டையிடுவதில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார். Image: Reuters ஜெலென்ஸ்கியின் பதிவு மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்த பாட்னா உயர்நீதிமன்றம்

பாட்னா பாட்னா உயர்நீதிமன்றம் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த  ஜனவரி 7ஆம் தேதி முதல் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  , இந்த கணக்கெடுப்புக்குத் தடை விதிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கைத் தலைமை நீதிபதி கே.வி.சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.  நேற்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான தினு குமார், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது … Read more

கிளாமர் படங்களால் லைக்குகளை அள்ளிய மிருணாள் தாக்கூர்

2022ம் ஆண்டில் தெலுங்கில் தயாராகி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் ஆகி வரவேற்பைப் பெற்ற படம் 'சீதா ராமம்'. அப்படத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்களைத் தன் வசம் பெற்றவர் படத்தில் கதாநாயகியாக நடித்த மிருணாள் தாக்கூர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மிருணாள் நேற்று அவருடைய இன்ஸ்டா தளத்தில் சில கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். “என்னை சொர்க்கத்திலும் நீங்கள் பார்க்கலாம்,” எனப் பதிவிட்டிருந்த அந்த போட்டோக்கள் 14 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளன. கடற்கரையில் இருந்து எடுத்த … Read more