வளர்மதி செம டென்ஷன்… என்னங்க இது? பவர் கட் விஸ்வரூபம்… உள்ளே புகுந்த திமுக!

தமிழகத்தில் திமுக ஆட்சி என்றாலே மின் வெட்டு என்பதை தவிர்க்க முடியாது என அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தற்போது கோடைக்காலம் வாட்டி வதைக்கும் நிலையில் மின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. மொத்தம் 2.67 கோடி மின் நுகர்வோர்கள் இருக்கும் சூழலில் தினசரி 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவிற்கு மின் தேவை ஏற்படுகிறது.

தொடரும் மின்வெட்டு; போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

கோடையில் மின் தேவை

அதுவே கோடைக்காலம் என்றால் 16 ஆயிரம், 17 ஆயிரம் என கிடுகிடுவென அதிகரிக்கக் கூடும். நடப்பாண்டு மார்ச் மாதம் 18 ஆயிரத்து 53 மெகாவாட் என மின் தேவை புதிய உச்சம் தொட்டது. அதற்கு அடுத்த மாதமே 18 ஆயிரத்து 252 மெகாவாட் மற்றொரு உச்சத்தை எட்டியது. இருப்பினும் தமிழக அரசு சமாளித்து மின் வெட்டு ஏற்படாமல் செயல்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருகிறார்.

மின் வெட்டு பிரச்சினை

ஆனால் மின்சாரம் அவ்வப்போது தடைபடுவதாக குற்றச்சாட்டு எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதிலும் மின் வெட்டு என்பது வேறு, மின் தடை என்பது வேறு எனக் கூறி மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலைமையை சமாளித்து வருகிறார். ஆங்காங்கே பராமரிப்பு பணிகள் தான் நடைபெற்று வருகின்றன. இதற்காக குறுகிய நேரம் மட்டும் மின் தடை ஏற்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பரபரப்பு

இந்த விவகாரத்தை அதிமுக தரப்பு கையிலெடுத்து புகார் அளிக்க உரிய ஏற்பாடுகளை செய்தது. அதாவது, சென்னை ஆலந்தூரில் கடந்த சில நாட்களாக தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் உள்ளிட்டோர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றனர்.

வளர்மதி நேரில் புகார்

அங்கு உதவி செயற்பொறியாளர் கருப்பையாவை சந்தித்து புகார் தெரிவித்தனர். பேசிக் கொண்டிருக்கும் போதே வளர்மதி டென்ஷனாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்து அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் விரைந்து வந்தனர். அவர்கள் அதிமுகவினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து வளர்மதி உள்ளிட்டோர் அங்கிருந்து புறப்பட்டனர்.

, அதிமுக இடையே மோதல்

ஆனால் அலுவலகத்திற்குள் அதிமுக, திமுக என இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. மேலும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.