உலகின் முதல் 3டி இந்து கோவில் தெலுங்கானாவில் உருவாக்கம்..!

தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் Burugupally பகுதியில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்து கோவில் உருவாக்கப்படுகிறது. கணிணியில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் வடிவமைப்பைக் கொண்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. விநாயகருக்காக கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்காக சிவலிங்கம் வடிவிலும், பார்வதிக்காக தாமரை வடிவிலும் இந்தக் கோவில் அமைய உள்ளது Source link

உயர்கல்வியில் விளையாட்டு பிரிவு இடஒதுக்கீட்டை உயர்த்த உத்தரவிட முடியாது – வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கை மேற்கொள்வதற்கான இடஒதுக்கீட்டை உயர்த்த உத்தரவிட முடியாது என தெரிவித்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல பள்ளி மாணவர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்து பள்ளி பருவத்தில் இருந்தே கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் … Read more

சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் இணைந்து செல்ல வேண்டும் – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் கருத்து

புதுடெல்லி: தனியார் தொலைக்காட்சி சார்பில் தலைநகர் டெல்லியில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வனப் பகுதியின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு திட்டங்களால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தரமான சாலை, ரயில் பாதைகள் அவசியம். அதேநேரம் வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க … Read more

எதே..! நாங்க எதுவும் பண்ணல… சீமான் ட்விட்டர் ஐடி முடக்கம்.. சென்னை காவல்துறை விளக்கம்

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் காரணமே இன்று முடக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பாஜக அரசுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பேசியதாக சீமானின் ட்விட்டர் கணக்கை நீக்கியதாகவும், ஒரு சிலர், சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் கோரிக்கையின்படி நீக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். குறிப்பாக, … Read more

கோவையில் அரங்கேறிய கோர விபத்து..! ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலி

கோயம்பத்தூர், கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையில் ராட்சத பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

தோனிக்கு வெற்றிகரமாக முடிந்த முழங்காலில் அறுவை சிகிச்சை… வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு!

சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, மும்பை மருத்துவமனையில் இடதுகால் மூட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐ.பி.எல் முழுவதும் முழங்கால் வழியால் அவதிப்பட்ட தோனி, முழங்காலுக்கு ஐஸ்பேக் வைத்து சமாளித்து விளையாடினார். ஐ.பி.எல் தொடரில், சி.எஸ்.கே அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த கையோடு அமதாபாத்தில் இருந்து மும்பை சென்ற தோனிக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாள்களில் மருத்துவமனையில் இருந்து … Read more

ஆட்டோவில் சென்று ரசிகரின் அம்மாவிடம் உடல் நலம் விசாரித்த சூரி

வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார் சூரி. முதல்பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்தபாகம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. தற்போது கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றார் சூரி. அப்போது தனது ரசிகர் ஒருவரின் தாயார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தவர் ஒரு ஆட்டோவில் அவரது வீட்டுக்கு … Read more

Rajini: உதயநிதியின் அழைப்பை ரிஜக்ட் செய்த சூப்பர் ஸ்டார்..? யோசிக்காமல் ஓக்கே சொன்ன கமல்!

சென்னை: உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் இம்மாதம் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு உதயநிதி அழைத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதிக்கு நோ சொன்ன சூப்பர் ஸ்டார்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது. … Read more

"மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு நீதி கிடைக்கும்" – பா.ஜனதா எம்.பி. மேனகா காந்தி உறுதி

ஸ்ரீநகர், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் தெரிவித்து அவரை கைது செய்யக்கோரி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள், கடந்த செவ்வாய்க்கிழமை தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அறிவித்து போராடினர். இதையடுத்து அவர்களின் போராட்டம் முடக்கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி., மேனகா காந்தி, நேற்று ‘மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வெற்றி பெறும், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படுவார்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். விலங்குகள் … Read more