Tragedy in tourism: 5 drowned | சுற்றுலாவில் சோகம்: 5 பேர் நீரில் மூழ்கி பலி

ஜாம்நகர்: குஜராத்தில் சப்தா அணைக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். குஜராத்தில் ஜாம்நகரைச் சேர்ந்த மகேஷ் மாங்க், 42, என்பவரின் குடும்பமும், அவரது அண்டை வீட்டாரின் குடும்பமும் இணைந்து அருகே உள்ள சப்தா அணைக்கு சுற்றுலா சென்றனர்.அணையை சுற்றி பார்த்த போது, எதிர்பாராதவிதமாக, ஐந்து பேர் நீரில் தவறி விழுந்து மூழ்கினர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், நீண்டநேர தேடுதலுக்கு பின், ஐந்து … Read more

ஆகஸ்ட் 4ல் ரீ -ரிலீஸ் ஆகும் சுப்ரமணியபுரம்

கடந்த 2008ம் ஆண்டில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். 1980கள் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்திய படம். காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றை கூறிய இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ‛‛கண்கள் இரண்டால்…, மதுர குலுங்க குலுங்க…'' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்த படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தமிழகம் முழுக்க ரீ-ரிலீஸ் ஆக … Read more

Tasmanian golfer Isabel Sutherland is lifeblood of the club at age 98, swears by health effects | 98 வயதிலும் ‛ கோல்ப் விளையாடும் பெண்

சிட்னி: 98 வயதிலும் கோல்ப் விளையாடி அசத்துகிறார் ஒரு பெண்மணி. ஸ்காட்லாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் இசபெல் சதர்லேண்ட் 98. இவர் சிறு வயது முதல் கோல்ப் விளையாடும் பழக்கம் கொண்டவர். இன்று 98 வயதை தொட்டாலும் வாரம் 2 முறை கோல்ப் விளையாட அருகில் உள்ள மைதானத்திற்கு கிளம்பி விடுவார். குளிராக இருந்தாலும் அதனை பொருட்படுத்துவதில்லை. ஒரு முறை கோல்ப் ஆடும்போது இவர் 7 கிலோ மீட்டர் நடக்கும் வாய்ப்பு கிடைப்பதாக கணக்கிடப்படுகிறது. “மைதானத்திற்கு சென்று … Read more

Meena: அஜித்தின் வாலி படத்தில் மீனா… திடீரென நோ சொல்ல அந்த சீன் தான் காரணமா..?

சென்னை: அஜித் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எஸ்ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான இப்படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முன்னதாக இப்படத்தில் சிம்ரன் கேரக்டரில் மீனா தான் நடிப்பதாக இருந்துள்ளது. ஆனால், திடீரென வாலி படத்தில் இருந்து நடிகை மீனா விலகிவிட்டதாகவும், அதற்கான காரணம் பற்றியும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வாலி படத்தில் இருந்து விலகிய மீனா? ஆரம்ப காலங்களில் அஜித்துக்கு மிகப் பெரிய … Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித … Read more

உலக மனிதக் கடத்தல் எதிர்ப்பு தினம்: அடிமை வாழ்விலிருந்து மீண்டு வந்த ஜெகதீசன் சொல்வதென்ன?

“ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும், யாரையும் விட்டுவிட வேண்டாம்” – Reach every victim of trafficking, leave no one behind மனித குல வரலாற்றில் மனிதக் கடத்தல் எனப்படுவது பல்லாண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. வரலாற்றில் பெரும் பகுதியில் அடிமைத் தொழில் என்பது அதிகாரப்பூர்வமாகவும் பரந்துபட்டும் இருந்திருக்கிறது. இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மனிதக் கூட்டம் மற்றொரு மனிதக் கூட்டத்தின் மீது நிகழ்த்தும் வன்முறையாக இருந்தது. அடிமைத்தனம் அங்கீகரிக்கப்படாத நிலையில் மனித கடத்தல் இன்னமும் நிகழ்ந்து கொண்டு … Read more

கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்துக்கு சிலிண்டர் கசிவு காரணம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்துக்கு சிலிண்டர் கசிவு காரணம் என தடயவியல் நிபுணர்கள் அறிக்கை வழங்கி உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் நேரிட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் 6 கடைகள் தரைமட்டமானதுடன், 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து … Read more

10 லட்சம் கிலோ போதைப் பொருளை இந்தியா அழித்துள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா இதுவரை 10 லட்சம் கிலோ போதைப் பொருளை அழித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 30) அவர் உரையாற்றுகையில், “மக்கள் போதைப் பழக்கங்களைக் கைவிட்டு உடலைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தியா 10 லட்சம் கிலோ … Read more

அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும்… அந்தர்பல்டி அடித்த திருச்சி சூர்யா!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பு அக்கட்சியில் இணைந்தார். பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யாவுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவை விமர்சித்து பதிவிட்டு வந்தார் திருச்சி சூர்யா. இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகியான டெய்சி சரணை திருச்சி சூர்யா ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் மீது கட்சி நடவடிக்கை பாய்ந்தது. 6 மாதங்கள் … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: தாறுமாறா எகிறிய மவுசு… புது ரயில்கள், புது ரயில் நிறுத்தங்கள் எப்போது?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் வன்முறை சம்பவங்களை ஒட்டி தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மத்திய அரசு தங்கள் திட்டமிட்டபடி முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறது. மேலும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து வருகின்றனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதில் மக்களுக்கு பயன் தரக்கூடிய விஷயங்களும் இருக்கின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சகத்திடம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடர்பாக 170க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக … Read more