பாஜகவை பாம்புடன் ஒப்பிட்ட உதயநிதி: மோடியின் நண்பர் குறித்தும் பேச்சு!

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திமுக சார்பாக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார் . திரைப்பட நடிகர், ஸ்டாலினின் மகன் ஆகிய காரணிகளால் மக்கள் கூட்டம் நன்றாக கூடியது. கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் போல் கம்பீரமாக முழங்காவிட்டாலும் யதார்த்தமாக பேசி கவனம் பெற்றார். ஆரம்பத்தில் மென்மையாக எதிர் தரப்பை கலாய்த்து கவனம் பெற்று வந்த உதயநிதி தற்போது தனது பேச்சில் அதிரடி காட்டி வருகிறார். அதிலும் நீட் தேர்வு … Read more

கடலூர் மாவட்டத்தில் பாமக ஆண்டு விழா கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

 ன்னை சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த பாமக சார்பில் அனுமதி  கோரப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கடலூரில் அண்மையில் என்.எல்.சிக்கு எதிராக பாமக போராட்டம் நடத்திய இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதால், அங்குச் சட்டம் … Read more

துணை வேந்தர் நியமனத்தில் ஏட்டிக்குப் போட்டி: கவர்னருடன் மல்லுக்கட்டும் தி.மு.க., அரசு! | Competition for Deputy Chancellor appointment: DMK, Govt to wrestle with Governor!

அரசு பல்கலைகளுக்கான துணை வேந்தர்கள் நியமனத்தில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., விதிகளை பின்பற்றுமாறு, கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, பல்கலைகளின் சட்ட விதிகளை திருத்த, அரசு முன்வராமல் உள்ளதால், சென்னை பல்கலை உள்பட, மூன்று பல்கலைகளுக்கு, புதிய துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணிகள் முடங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகளின் துணை வேந்தர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். துணை வேந்தருக்கான தேடல் குழுக்களை, கவர்னர் அலுவலகம் அமைக்கிறது. இந்த குழுவில், பல்கலைகள், அரசு மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் … Read more

கடைசி வரை நான் காமெடியன் தான் – யோகிபாபு

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛லக்கி மேன்'. செப்., 1ல் படம் வெளியாகிறது. செய்தியாளர்களிடம் பேசிய யோகிபாபு, ‛‛என் வாழ்க்கையில் நான் ‛அன் லக்கியாதான்' சுற்றிக் கொண்டு இருந்தேன். நல்ல இயக்குனர்களால் லக்கி மேன் ஆனேன். 23 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். பாலாஜி என்னிடம் வரும் போது அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பொதுவாக என்னிடம் வரும் ஒவ்வொரு இயக்குனர்களிடமும் கதை கேட்டு படம் பண்ணுவதில்லை. அவர்களின் கஷ்டங்களை கேட்டு … Read more

மொத்தத்தையும் ஆட்டைய போட நினைச்சா எப்படி.. விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்க இதுதான் காரணமா?

சென்னை: தளபதி 68ல் அதிகப்படியாக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், என்ன காரணத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை வழங்க ஒப்புக் கொண்டது என்பது குறித்தான தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாவதற்கு 6 வாரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டுகள்

கோவை | இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த மாநகர காவல்துறை

கோவை: கோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாநகர காவல்துறையினர் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள 35 மாணவர்களை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார். கோவை மாநகர காவல்துறையின் சார்பில், ‘ஆப்ரேசன் ரிபூட்’ திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநகரில் நடப்புக் கல்வியாண்டில் இதுவரை இடைநின்ற மொத்தம் 173 மாணவ, மாணவிகள் … Read more

சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்.2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1: மக்கள் நேரில் பார்க்க ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ ஏற்பாடு

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டர் கலன், இறங்கிய இடத்தில் இருந்தபடியும், அதில் இருந்து வெளியே … Read more

தமிழகம் முழுக்க இடி மழை வெளுக்க போகுது… தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!

தமிழகம் முழுவதும் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கனமழைதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் மழைகுறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. … Read more

தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தின் ஹீரோ இவரா.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். கோலிவுட் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரின் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க பல முயற்சிகள் நடந்து வந்தது. ஆனாலும் அவர் இயக்குனாராக தான் ஆவேன் என்பதில் உறுதி இருந்தது. அதன்படி தற்போது தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகம் ஆவதும் உறுதியாகிவிட்டது. கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். இவருக்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ளது. தற்போது விஜய் ‘லியோ’ படத்தில் … Read more

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக் கோவில் விளங்குகிறது. மலையையே இந்த திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடப்படுகிறது. எனவே அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நாளை … Read more