மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; தற்கொலை தடுப்பு வலையில் குதித்ததால் பரபரப்பு
மும்பையிலுள்ள மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்துக்கு இன்று அப்பர் வார்தா அணைக்கட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்துவதற்காக வந்திருந்தனர். அவர்களில் சிலர் தலைமைச் செயலகத்துக்குள் சென்றனர். அவர்கள் மேல் தளத்திலிருந்து கீழே குதித்தனர். அடிக்கடி போராட்டம் நடத்துவதற்காக மந்த்ராலயாவுக்கு வருபவர்கள், மேலே இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடந்தது வந்ததால், மந்த்ராலயாவின் முதல் தளத்தில் தடுப்பு வலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பு வலைமீது இன்று விவசாயிகள் திடீரென குதித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more