RIP Thiru. Marimuthu : அவர் மறைவு தமிழ் சினிமாவின் பெரிய இழப்பு ! தமிழ் சினிமாவில் மாரிமுத்து

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிகுந்த வரவேற்பை பெற்றார் நடிகர் மாரிமுத்து. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சினிமாவில் நடித்தும் படங்களுக்கு துணை இயக்குனராக பணிபுரிந்தும் இருக்கிறார். இவரின் பேச்சுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும் இவருக்கேனே ரசிகர்கள் நிலையாக இருந்து வருகின்றனர். மாரிமுத்து சினிமா இயக்குனராக வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்ட மாரிமுத்து வாய்ப்பை தேடி வரும்போது முதலில் ஹோட்டலில் வெய்ட்டராக பணிபுரிந்தார். வைரமுத்துவின் வரிகளுக்கு இவர் … Read more

6 மாநிலத்தில் நடந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுகள்

டில்லி நடந்து முடிந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த 5 ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவ்வாறு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் உத்தரப் பிரதேசத்தின் கோசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தாராசிங், தனது பதவியை ராஜினாமா … Read more

அதிர்ச்சி, ஏற்க முடியவில்லை : மாரிமுத்து மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து அசத்திய அவரின் மறைவு செய்தி வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஜினிமாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி. சசிகுமார்மாரிமுத்துவின் மரணம் … Read more

அய்யோ.. கடவுளே.. மாரிமுத்து மரண செய்தி கேட்டு கதறிய நடிகர் சூரி!

சென்னை: ஆதி குணசேகரனாக அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்த மாரிமுத்து நடிகர் மாரிமுத்துவின் மரண செய்தி கேட்டு கதறி அழுத நடிகர் சூரி. பேருந்து வசதி,பள்ளிக்கூட வசதியே இல்லாத ஒருகிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மாரிமுத்து, திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். பல ஆண்டு போராட்டத்திற்கு பின் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்ற கிடைத்த

கோலார் தங்கவயலில் கார் மோதியதில் சிறுவன் சாவு

கோலார் தங்கயவல் கோலார் மாவட்டம் தங்கவயல் சீனிவாஸ்பூர் தாலுகா தாடிகொள் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி வெங்கடம்மா. இத்தம்பதியின் மகன் லகரி (வயது 2). நேற்று முன்தினம் மாலை லகரி பாட்டியின் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று லகரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த லகரி உயிருக்காக போராடி கொண்டிருந்தான். இதை பார்த்த கார் டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்தநிலையில் விபத்தை … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி

நியூயார்க், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என கைப்பற்றியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்க ஜோடி அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றியது. … Read more

அமெரிக்காவில் இந்திய நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் கைது

வாஷிங்டன், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களான நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் இந்தியா மற்றும் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. மர்மகும்பலுக்கு வலைவீசி தேடியது. இந்தநிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து … Read more

வருமான வரி வளர்ச்சிதான் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அடுத்த 24 ஆண்டுகளில், அதாவது, 2047-ம் ஆண்டில் 48.2 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்த ஆண்டுக்கான சர்வதேச ஃபின்டெக் நிறுவனங்களின் ஆண்டுக் கூட்டத்தில் (Global Fintech Fest – 2023) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாக இருப்பது வரி வருவாய்தான். வரி வருவாய் வளர்ச்சி எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறதோ, அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக … Read more

அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி: ஒரு மாதத்தில் செலுத்த உதகை ஜிம்கானா கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி, 31 கோடி ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த உதகை ஜிம்கானா கிளப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள 10.32 ஏக்கர் அரசு நிலம் 1922-ம் ஆண்டு ஜிம்கானா கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பல்வேறு காலக் கட்டங்களில் அந்த குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டதுடன் குத்தகை தொகையும் மாற்றியமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு, கிளப் நிர்வாகத்தால் பாக்கி வைக்கப்பட்டிருந்த தொகையை செலுத்துமாறு முதல்முறையாக தாசில்தார் … Read more

"உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்" – ஜோ பைடன் நெகிழ்ச்சி

புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபரான பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையம் வந்த அவரை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தனது மகளுடன் அப்போது உடன் இருந்தார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் … Read more