ஊசி.. மாத்திரை..கஞ்சா..! விக்ரம் படம் போல நிஜ சம்பவம்! அதிர்ந்து போன மதுரை போலீஸ்!

மதுரையில் 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், நூற்றூக்கும் மேற்பட்ட  போதை தரும் மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு ஆன்லைனில் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வலையில் சிக்கிய பாஜக…

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு அமித்ஷா, ஜெ.பி. நட்டா என பாஜக மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இவர்களுக்கு எல்லாம் மேலே உ.பி. சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சாரியா உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். “சனாதனம் என்றால் என்ன? இந்தப் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனம் – சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது … Read more

தி.மு.க., பிரமுகர் வெட்டப்பட்ட ஹோட்டலில் சிறப்பு பூஜை| Special pooja at DMK, Pramukhar cut hotel

பானஸ்வாடி : மதுரை தி.மு.க., பிரமுகர் குருசாமி வெட்டப்பட்ட ஹோட்டலில், அதன் உரிமையாளர் சிறப்பு பூஜை செய்தார். தமிழகம் மதுரையைச் சேர்ந்தவர் குருசாமி, 55. தி.மு.க., பிரமுகர். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர். இவரது குடும்பத்திற்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் குடும்பத்திற்கும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் உள்ளது. இதனால் இரு குடும்பத்திலும் பழிக்குப் பழியாக கொலைகள் நடந்து வந்தன. இந்நிலையில், பெங்களூரு பானஸ்வாடியில் வசிப்பதற்கு வீடு தேட, மதுரையில் இருந்து … Read more

விஜய் 68ல் பிரசாந்த், பிரபுதேவா?

லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு அமெரிக்காவில் இந்த படத்தின் கேரக்டருக்காக டெஸ்ட் லுக்கும் விஜய்க்கு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் என இருவரும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளது. இந்த நிலையில் … Read more

Jawan: ஜவான் படத்தில் விஜய்..? தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அட்லீ… அட பாவமே!

சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை (செப்.7) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை மறுத்துள்ள இயக்குநர் அட்லீ, விஜய், ஷாருக்கான் இணையும் படம்

Tata Nexon.ev Bookings – செப்டம்பர் 9.., டாடா நெக்ஸான்.ev முன்பதிவு துவக்கம்

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான்.ev எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதியும், விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்படலாம். இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக எஸ்யூவி என்ற பெருமையுடன் விளங்கும் நெக்ஸான் மாடல், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் ICE அடிப்படையில் நெக்ஸான்.இவி டிசைன் அம்சங்களை சில மாறுதல்களை பெற்றிருக்கும். Tata Nexon.ev Bookings விற்பனையில் உள்ள … Read more

4 சூப்பர் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்தில்…

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் கீழ் 4 சூப்பர் அணிகளுக்கு இடையிலான சுற்றுப் போட்டிகள் அடிப்படை அட்டவணைப்படி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலேயே நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் கொழும்பில் பெய்து வரும் மழை காரணமாக இறுதிப் போட்டி உள்ளிட்ட 4 சூப்பர் அணிகளுக்கிடையிலான போட்டிகளை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் நாட்களில் மழை குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்புடன், போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யாமல் இருக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை … Read more

சென்னை: அமமுக பிரமுகர் வெட்டி கொலை…மீன் கடையில் நடந்த கொடூரம் – என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் அந்தப்பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ஜெகன் மீன் கடையில் இருந்தார். அப்போது ஆறு பேர் கும்பல் மீன் கடைக்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் ஜெகனை சுற்றி வளைத்து வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க கடையில் இருந்து சாலைக்கு ஓடி வந்தார் ஜெகன். … Read more

“செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பதன் மர்மம் என்ன?” – அண்ணாமலை கேள்வி

சென்னை: “உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொதுமக்களிடம் பண மோசடி செய்த ஒருவரை, … Read more

“உரிய பதில் அவசியம்” – உதயநிதி சனாதன சர்ச்சையில் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு ‘உரிய பதில்’ அளிப்பது அவசியம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதில்தான் சனாதன சர்ச்சை குறித்து பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார். மத்திய அமைச்சர்களிடம் அவர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்; எனினும், வரலாறு பற்றி … Read more