தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் சர்ச்சை! ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் பற்றி பேசி பிரச்சனையை திசை திருப்புகிறது திமுக  என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். திமுகவினர் சனாதனம் பற்றி பேசி மக்களின் பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டி, முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ்  காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் … Read more

சனாதனத்தை மதியுங்கள்: உதயநிதிக்கு குஷ்பு அட்வைஸ்

நடிகராக இருந்து தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “டெங்கு, கொரோனாவை ஒழித்தது போன்று சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. போலீசிலும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன. இது தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “நான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்து இருக்கிறேன். ஆனாலும் மக்கள் … Read more

பிரிட்டனுக்கு பலன் ஏற்பட்டால் மட்டுமே இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ரிஷி சுனக்| Rishi Sunaks Non-Negotiable Condition For Trade Deal With India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனுக்கு பலன் ஏற்பட்டால் மட்டுமே, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிரிட்டன், வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதேபோல், பிரிட்டனுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யவும் இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனை தீர்க்க இரு நாடுகளும் தீவிரமாக பேசி … Read more

Bharatna Jones – சர்ச்சையை கிளப்பிய ராம் கோபால் வர்மா.. இந்தியா பெயர் மாற்ற சர்ச்சைக்கு நெத்தியடி!

ஹைதராபாத்: இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றும் விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், பல சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் இந்தியா என பெயர் மாற்றம் செய்வதால் என்ன இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து விடப் போகிறதா என கேள்வி எழுப்பி இருந்தார். ஒளிப்பதிவாளர் பிசி

Honda Elevate vs Rivals on-road Price Comparison – ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் மிக கடும் போட்டியாளர்களை பெற்ற C-பிரிவு சந்தையில் வந்துள்ள ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின், மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. Honda Elevate on-Road price in TamilNadu எலிவேட் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் சிட்டி காரில் … Read more

ஆபிரிக்க காலநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமருடன் சந்திப்பு

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலியை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய ருவன் விஜேவர்தன குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். எகிப்து பிரதமர் மற்றும் ருவன் விஜேவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளும் இயலுமை தொடர்பில் … Read more

கனவு -117 | `பிளாஸ்டிக்கிலிருந்து சமையல் எரிவாயு முதல் டைல்ஸ் வரை' – கோயம்புத்தூர் வளமும் வாய்ப்பும்

(Cooking fuel from plastic waste)குப்பையிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சமையல் எரிபொருள்! கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாலூர் குப்பைக் கிடங்கிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து, சமையல் எரிபொருள் தயாரிக்கலாம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை, ரிவர்ஸ் இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் (Reverse engineering) மூலமாக, நான்கு அல்லது அதற்கும் குறைவான கார்பன் அணுக்களைக்கொண்ட எரிபொருளை உருவாக்கலாம். இதைச் சமையல் எரிவாயுவாகவும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம். கச்சா எண்ணெய் என்பது ஹைட்ரோ-கார்பனின் கலவையே. இந்தக் கலவையிலிருந்துதான் பெட்ரோல், டீசல் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், கோவை, நீலகிரி, தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் புதிய கட்டிடத்திலும் நடைபெற வாய்ப்பு

புதுடெல்லி: வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும், அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. … Read more

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில், எப்போது கனமழை? வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 7ஆம் தேதி கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. செம்படம்பர் 8ஆம் … Read more