உதயநிதி தலைக்கு 10 கோடி.. சாமியாருக்கு ஆதரவாக பேசிய செல்லூர் ராஜு.. "வன்முறை கிடையாதாம்"

மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டி வருபவர்களுக்கு உத்தரபிரதேச சாமியார் ஒருவர் ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமின்றி இந்து அமைப்புகளும், அஹோரிகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு … Read more

Leo second single: லியோ செகண்ட் சிங்கிளில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா ?இது லிஸ்ட்லயே இல்லையே..!

​நா ரெடிலியோ திரைப்படத்தில் இருந்து விஜய் பாடிய நா ரெடி தான் என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ள இப்பாடல் சில சர்ச்சைகளில் சிக்கியது. இருந்தாலும் ரசிகர்களின் பேராதரவு இப்பாடலுக்கு இருந்ததால் யூடியூபில் பல சாதனைகளை நா ரெடி நிகழ்த்தி காட்டியது. செம மாஸான குத்து பாட்டாக வெளியான நா ரெடி பாடலில் விஜய்யின் நடனம் எப்படி இருக்கும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். பாடலில் ஒரு சில கிலிம்ப்ஸ் … Read more

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? எச்சரிக்கை… DogeRAT ட்ரோஜன் மால்வேர் அலர்ட்

புதுடெல்லி: புதிய தீம்பொருள் (malware) சமூக ஊடகங்கள் வழியாக ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கிறது என்று மத்தியிஅ அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு அதிநவீன தீம்பொருள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முதன்மையாக இந்தியாவில் அமைந்துள்ள ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கும் DogeRAT எனப்படும் திறந்த மூல தொலைநிலை அணுகல் ட்ரோஜன் கண்டறியப்பட்டுள்ளது. இது முக்கியமான தரவை அணுகக்கூடியது என்பதோடு, ஹேக்கர்கள் அந்த குறிப்பிட்ட சாதனங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.  இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு துறையான டிஃபென்ஸ் அக்கவுண்ட்ஸின் கண்ட்ரோலர் … Read more

மக்களின் பிரச்சினைக்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு

டில்லி மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க   நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் காங்கிரஸ்  கட்சி தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.  நேற்று டில்லியில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வியூக கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புக் … Read more

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்! சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்பு

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ மற்றும் இந்தியா மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்னும் ஒரு சில நாட்களில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தொடங்க உள்ள நிலையில், தற்போது இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்கிறார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் Source Link

'ஜவான்' வெளியீட்டடால் நேரடி தமிழ்ப் படங்களுக்கு சிக்கல்

தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தமிழ் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில், ஹிந்தி நடிகரான ஷாரூக்கான் நடித்து செப்டம்பர் 7ம் தேதி வெளிவர உள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளதால் இந்த வாரம் வெளியாக உள்ள நேரடித் திரைப்படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் வெளியாகிறது. இதோடு, … Read more

Meesai Rajendran: ஜெயிலர் அளவிற்கு லியோ வசூலிக்காது.. மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறும் பிரபலம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஜினி மீண்டும் தன்னை சூப்பர்ஸ்டார்தான் என்பதை நிரூபித்துள்ளார். இந்தப் படத்தின் கலெக்ஷனை விஜய்யின் லியோ படம் முறியடிக்குமா என்ற

“பாரத் என்பதையும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையையும் வரவேற்கிறேன்!’’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால், ரொட்டி மற்றும் பழம் உள்ளிட்ட சத்தான உணவை வழங்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதை  கருத்தில் வைத்துதான் முன்பு வழங்கி வந்தோம். அது மீண்டும் தொடரும். இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றுவதை வரவேற்கிறோம். பாரதநாடு பழம்பெரும் நாடு என்பதால் வரவேற்கிறேன். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்கெனவே நடந்துள்ளது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்துள்ளது. அந்த … Read more

சிறையில் சொகுசு வசதி வழக்கு | சசிகலாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்ட் – பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகளை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சசிகலாவும், இளவரசியும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை த‌ண்டனை அனுபவித்தனர். அப்போது … Read more

2-வது முறையாக ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை மாற்றம்

சென்னை: சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 2-வது முறை வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல் 1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி57 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 235 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 19,500 கி.மீ தூரமும் … Read more