அரிய வகை மீன்..! ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பாகிஸ்தான் மீனவர்..!

கராச்சி, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த தனது தொழிலாளர்களுடன் கடந்த திங்கட்கிழமை அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்களின் வலையில் தங்க மீன் அல்லது “சோவா” என்று அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் சிக்கின. பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ எடை மற்றும் 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது. … Read more

சர்வதேச சமூகத்துடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதே இலங்கையின் நோக்கம் – ஜனாதிபதி

  இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் பொற்காலமென கருதப்படும் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம் வரையிலானது எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி,உலகளாவிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கையின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச … Read more

கனவு -135 | `உலர் தக்காளி ஃபிளேக்ஸ்… சூரியகாந்தி சப்ளிமென்ட்ஸ்' | திருப்பூர் – வளமும் வாய்ப்பும்!

(Sunflower Lecithin Supplements)சூரியகாந்தி லெசிதின் சப்ளிமென்ட்ஸ் திருப்பூர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான சூரியகாந்தியின் விதையிலிருந்து, சூரியகாந்தி லெசிதின் (Sunflower Lecithin) எனும் மருந்துப் பொருளைத் தயாரிக்கலாம். இதை, உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும் சப்ளிமென்ட்ஸாக, அதாவது துணை உணவாக உட்கொள்ளலாம். உடலில் அதிக அளவு கொழுப்பு கொண்டிருப்பவர்கள், கல்லீரல் சிகிச்சை பெறுவோர், தடகள வீரர்கள், சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு சூரியகாந்தி லெசிதின் எனும் சப்ளிமென்ட்ஸை தேவையான அளவுக்கு உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது, உடலிலுள்ள … Read more

கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க அண்ணா பல்கலை. தீவிர நடவடிக்கை

சென்னை: சமீபத்தில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்த மாணவர்கள், சக மாணவரை ராகிங்செய்ததாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ராகிங் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அண்ணாபல்கலைக்கழகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, … Read more

5 மாநில தேர்தலில் பாஜக, காங்கிரஸில் 12%-க்கும் குறைவான பெண் வேட்பாளர்கள்

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்; கை 12 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதன்படி மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும் மக்களவை தொகுதி மறுவரையறை காரணமாக வரும் 2029 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு … Read more

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகம், பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் அந்த மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அந்த மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், அதை கிடப்பில் போடுவதாக மேற்கூறிய மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராகத் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன. … Read more

In Kerala, the responsibility of the police station should be given back to the SI | கேரளாவில் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு மீண்டும் எஸ்.ஐ.,யிடம் வழங்க ஆலோசனை

மூணாறு:கேரளாவில் போலீஸ் ஸ்டேஷன்களின் பொறுப்பு மீண்டும் எஸ்.ஐ.,க்களிடம் வழங்க உள்துறை ஆலோசித்து வருகிறது. கேரளாவில் போலீஸ் ஸ்டேஷன்கள் எஸ்.ஐ.,க்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. கடந்த இடது சாரி கூட்டணி அரசு 2018ல் அன்றைய டி.ஜி.பி. லோக்நாத்பெஹ்ரா அறிக்கையின்படி அதே ஆண்டு நவ.1 முதல் போலீஸ் ஸ்டேஷன்களை நிர்வாகிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கி அவர்கள் ‘ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர்’ என அழைக்கப்பட்டனர். அதன்படி மாநிலத்தில் 472 போலீஸ் ஸ்டேஷன்களை நிர்வகிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டர்களிடம் கைமாறியது. அதேபோல் 218 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டராக … Read more

மோகன்லால் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தை துவங்கிய ஜீத்து ஜோசப்

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப். மலையாள மட்டும் இன்றி தென்னிந்திய அளவில் ஏன் பாலிவுட்டிலும் கூட தனது திரிஷ்யம் படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். அதே சமயம் படத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேகமாக முடிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக செயல்படும் ஜீத்து ஜோசப் பெரிய நடிகர், சிறிய நடிகர் என பாரபட்சம் பார்க்காமல் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக மோகன்லால் நடிப்பில் நேரு என்கிற படத்தை இயக்கி வந்தார் … Read more

Kavin & Pradeep: பப்ஜிக்காக எல்லாம் கேவலமா சண்டை போட்டிருக்கோம்.. பிரதீப் நட்பு குறித்து கவின் பளீச்

சென்னை: நடிகர்கள் கவின் மற்றும் பிரதீப் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளை கடந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட நிலையில், முதல் நபராக கவின் குரல் கொடுத்திருந்தார். நடிகர்கள் கவின் -பிரதீப்: நடிகர் கவின் மற்றும் பிரதீப் இருவரும்

பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி வரம்பில் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்? – நிர்மலா சீதாராமன் பதில்

இந்தூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பிரதேசம் இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதால் மக்களுக்குப் பலன் கிடைக்கும். அதனால் அதற்கு பா.ஜனதாவும், மத்திய அரசும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்து வருகின்றன. ஆனால் தடுப்பது யார்?. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு பிரியங்கா ஆதரவாக இருந்தால், ஜி.எஸ்.டி. கவுன்சிலில் காங்கிரசின் ஒவ்வொரு மாநில அரசும் ஒப்புக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் … Read more