2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கு வரியை உயர்த்திய தமிழ்நாடு அரசு…

சென்னை: மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி, 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கு வரியை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் வாகனங்களுக்கான சாலை வரி வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலானது. இதனால், இருசக்கர வாகனங்கள், கார்களின் விலை உயர்ந்துள்ளது.  இதன் காரணமாக இருசக்கரம், 4 சக்கரம் வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு … Read more

கர்ப்பிணியாக நடிக்க தயங்கிய சிருஷ்டி டாங்கே

'காதலாகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு யுத்தம் செய், மேக்னா, எனக்குள் ஒருவன், கத்துகுட்டி, நவரச திலகம், தர்மதுரை, அச்சமின்றி, பொட்டு, சக்ரா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம் 'கட்டில்'. இதனை கணேஷ் பாபு இயக்கி, நடித்துள்ளார். 3 தலைமுறைகளாக ஒரு வீட்டில் தொடர்ந்து பாதுகாக்கப்படும் ஒரு கட்டிலை மையமாக கொண்ட கதை. இதனை எடிட்டர் பி.லெனின் எழுதியுள்ளார். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே கணேஷ் பாபு ஜோடியாகவும், … Read more

BlueSattai: \"CSK-ன் அயலானுக்கு பொங்கல் வைக்க வருகிறாரா கேப்டன் மில்லர்?\" கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே பொங்கல் தினத்தில் லால் சலாம், அயலான் திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு மாற்றப்பட்டது குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

Ultraviolette F99 – அல்ட்ராவைலட் F99 ரேசிங் பிளாட்ஃபாரம் EICMA 2023ல் அறிமுகம்

மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற அல்ட்ராவைலட் F99 ரேசிங் பிளாட்ஃபாரத்தை EICMA 2023 மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சர்வதேச சந்தைக்கு செல்ல உள்ள அல்ட்ராவைலட் F77 எலக்ட்ரிக் பைக் மாடலும் அறிமுகமானது. ஏக்டிவ் ஏரோடைனமிக்ஸ் மூலம் மிக சிறப்பான வகையில் காற்றினால் ஏற்படும் வேக இழப்பை கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பேனல்கள் வடிவமைப்பினை கொண்டுள்ளது. Ultraviolette F99 Racing Platform மிக தீவிர காற்றியக்கவியலில் கவனம் செலுத்தும் அல்ட்ராவயலட் … Read more

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்

  • பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு பி.ப 5.30 மணிக்கு “ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து கொண்டுவரும் பிரேரணை மீதான விவாதத்தை இன்று (09) நடத்துவதற்கு பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த … Read more

Doctor Vikatan: தினமும் ஆளிவிதை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உதவுமா?

Doctor Vikatan:  ஆளிவிதை பல வகையான நோய்களைத் தடுக்கக்கூடியது என்கிறார்கள்.  எங்கள் வீட்டில் அனைவரும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு ஆளிவிதை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இது சரியானதா… தொடர்ந்து சாப்பிடுவதால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுமா?  – நலன், காரைக்குடி பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் Doctor Vikatan: வாந்தி எடுப்பதால் காலை உணவை மறுக்கும் குழந்தை… செரிமான பிரச்னைக்குத் தீர்வு என்ன? ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது … Read more

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு: 9,000 பேருக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் 9,776 பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14-வதுபட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் சோ.ஆறுமுகம் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார். பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த 485 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நேற்றைய விழாவில் 3,318 … Read more

உ.பி.யின் அலிகர் நகரம் ‘ஹரிகர்’ என பெயர் மாற்றம் – மாநகராட்சி முடிவை ஏற்கிறது முதல்வர் யோகி அரசு 

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் “அலிகர்” நகரம், ‘ஹரிகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அலிகர் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, அந்த முடிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஏற்க உள்ளது. கடந்த 2016-ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் உத்தர பிரதேசத்தில் பல முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த 2019-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதனை குறிப்பிட்டிருந்தார். பைசாபாத், அலகாபாத், முகல்சராய் ஆகிய முஸ்லிம் பெயர்கள் … Read more

பிணைக் கைதிகள் வீடு திரும்ப இந்தியர்கள் விளக்கேற்றி வழிபட இஸ்ரேல் தூதர் வேண்டுகோள்

புதுடெல்லி: ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் விளக்கேற்றி வழிபட வேண்டும் என இந்தியாவுக்கான இஸ்ரேல்தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் 1,100 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலியர்கள் 240 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை தேடும் பணியில்இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. … Read more