“அரசு நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் தந்துவிட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதே பாஜக கொள்கை” – பிரியங்கா காந்தி

போபால்: அரசு நடத்தும் நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதே பாஜகவின் கொள்கையாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைநகர் போபாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வத்ரா, “ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற பெரிய அரசு நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. இதன் பின்னணியில் ஜவஹர்லால் நேருவின் எண்ணம் இருந்தது. நாட்டை முன்னோக்கி கொண்டு … Read more

முழு போர் நிறுத்தம் கோராத ஜி7 நாடுகள்; காசாவில் மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்?

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 33-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை. அதேநேரம், நேற்றிரவு காசா பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், காசாவின் முக்கிய மருத்துவமனைகளான அல்-ஷிஃபா மற்றும் இந்தோனேசியன் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி தாக்கின என்று … Read more

வருகிற வருடம் நடிகை ஹன்சிகா மோத்வானி வருடமாகும்

இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, படங்களான “மை நேம் இஸ் ஸ்ருதி” மற்றும் “கார்டியன்” குழுவினர் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் டீஸர் மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரே இரவில் உருகிய ஐபோன் 15 ப்ரோ… திடுக்கிட்டு எழுந்த பயனர் – என்ன பிரச்னை!

iPhone 15 Pro Overheating: ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் ஐபோன் 15, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. இதில், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிக வெப்பமடைவதாக புகார்கள் எழுந்துள்ளன.  iOS 17.0.3 அப்டேட் வந்த பிறகும், பயனர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது … Read more

வயது முதிர்வை தவிர்க்கும் ஆய்வு… பண்றியில் இருந்து எடுக்கப்பட்ட கலவையைக் கொண்டு எலியின் வயதை மாற்றிய விஞ்ஞானிகள்

பன்றி இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதிய கலவையைக் கொண்டு எலிகளின் வயதை மாற்றியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க பெருமளவு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.* மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க 70 சதவீதம் அளவுக்கு உதவியாக இருக்கும் இந்த ஆய்வின் அடுத்த கட்டத்தில் 80 வயது முதிர்ந்த மனிதரை 26 வயது இளைஞராக தோற்றம் பெற வைக்க முடியும் என்று உறுதிபட கூறுகிறார்கள். அமெரிக்காவின் காலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் … Read more

அசரடிக்கும் அண்ணாமலை.. தமிழ்நாட்டில் மலர்கிறது \"தாமரை மொட்டுகள்\"..10 தலையா? கவனித்த திராவிட கட்சிகள்

சென்னை: அதிமுகவில் கூட்டணி இதுவரை முடிவாகாத நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகம் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருபக்கம் கூட்டணி வியூகம் + மறுபக்கம் தொகுதிகளில் வியூகம் என டபுள்ரூட்டை கையில் எடுத்துள்ளது தமிழக பாஜக.. இதையடுத்து, தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அதிமுக என்ற பேச்சையே கடந்த 2 மாதங்களாகவே பாஜக முன்னெடுக்கவில்லை.. Source Link

World Cup Cricket: England Batting | உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து பேட்டிங்

புனே: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. புனே: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

சூர்யாவை காயப்படுத்த விரும்பாத பாலா!

பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கவிருந்த படம் 'வணங்கான்'. ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாக பாலா, சூர்யா என இருவருமே அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கின்றார். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக நடைபெற்று இறுதி … Read more

Vishal: “பிரச்சினையே அவன் தான்..” கார்த்தியுடன் சேர்ந்து விஷாலை கலாய்த்த ஆர்யா.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கார்த்தி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், ஜப்பான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தியுடன் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் ஒன்றாக மேடையேறினர். அப்போது விஷால் தான் பிரச்சினையே என கார்த்தியும் ஆர்யாவும் கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

Palestine: பிஞ்சுகளின் கனவுகளைச் சிதைக்கும் இஸ்ரேல்; கால்களை இழந்து கண்ணீர் சிந்தும் குழந்தைகள்!

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா-வின் கண்டனங்களை மீறி, பாலஸ்தீனத்தின் காஸா நகரில் ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. போரின் தொடக்கத்தில், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி இஸ்ரேலுக்குப் போர் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா, சர்வதேச நாடுகளிடமிருந்து வலுவான போர் எதிர்ப்புக் குரல்கள் வந்த பிறகு, `இஸ்ரேலியப் படைகள் காஸாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலுக்கும், இஸ்ரேலிய மக்களுக்கும் நல்லதல்ல’ என தற்போது கூறிவருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டைவேடம், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக, இருப்பதாக … Read more