கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ராய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் … Read more

காசாவில் இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு: 240 பேர் கொன்று குவிப்பு

காசா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர். காசாவில் இஸ்ரேல் படையினர் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் … Read more

2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அறிக்கை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு

2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. மொத்த மதிப்பீட்டுச் செலவு மற்றும் வருமானம் ஈட்டும் அடிப்படையாகப் பயன்படுத்தும் நிதி மற்றும் பொருளாதார அனுமானங்கள் தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு அரசாங்கத்தின் கொள்கைகளுடன் … Read more

தெலங்கானா தேர்தல்: கே.சி.ஆருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரேவந்த் ரெட்டி! – யார் இவர்?!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதுமே, தெலங்கானா குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதற்கு கர்நாடகாவில் கிடைத்த வெற்றியை எப்படியும் தெலங்கானாவில் பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்பு காட்டியது முக்கிய காரணம். தென்மாநிலங்களில் மீண்டும் கால் பதிக்க விரும்பும் பா.ஜ.க., எப்படியும் தெலங்கானாவில் ஜெயிக்க வேண்டும் என நினைந்து. மேலும் தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதில் … Read more

உருவானது ‘மிக்ஜாம்' புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது என்றும், சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி புயல் நகரும். … Read more

“நான் ம.பி. மக்களை நம்புகிறேன்… காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்” – கமல்நாத்  நம்பிக்கை

போபால்: மத்தியப் பிரதேசத்தில் வாக்குகள் எண்ணப்பட்டும் வரும் நிலையில், 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சம் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், “நான் தேர்தல் போக்குகளை பார்க்கவில்லை. முற்பகல் 11 மணி வரை எந்தப் போக்குகளையும் பார்க்கத் தேவையில்லை. நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மத்தியப் பிரதேச வாக்காளர்களை நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். பார்க்க > மத்தியப் … Read more

I.N.D.I.A கூட்டணியில் பலத்தை நிரூபிக்க தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் காங்கிரஸ்

Five State Assembly Elections Result 2023: இந்தியா கூட்டணிக்கு இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏன் முக்கியம்? காங்கிரஸ் வெற்றி பெற்றால், இந்தியா கூட்டணியில் ஆதிக்கம் செலுத்துமா? அடுத்து இந்திய அரசியலில் என்ன நடக்கும்? பார்ப்போம்.

அனிமல் படத்தில் ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Rashmika Mandanna Animal Movie Salary: அனிமல் திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மிரட்டும் மிக்ஜாம்… எப்போது கரையை கடக்கும்…. எங்கு கனமழைக்கு வாய்ப்பு?

Michaung Cyclone: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து, மிக்ஜாம் புயலாக இன்று காலை வலுபெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று திருப்பதி கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம்

திருப்பதி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெறுகிறது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது. வழக்கமாக இந்த உற்சவம் கோகர்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் நடக்கும். தற்போது மழை பெய்து வருவதாலும், புயல் உருவாகி உள்ளதாலும் வைபவ உற்சவ மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமியை வைபவ உற்சவ மண்டபத்துக்குக் கொண்டு சென்று … Read more