சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 4 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் ரோடு ஷோ நடத்தியும், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவும் உள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி சென்னையில், பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார். இதையடுத்து, அவர் செல்லும் பகுதிகளில் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டிரோன்கள் […]