வெற்றிமாறன், லோகேஷ், நெல்சன் மீட் அப்; அதிதி – அட்லி டான்ஸ்; ஷங்கர் வீட்டுத் திருமண விழா!

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று (15.04.2024) சென்னை ஈசிஆர் சாலை நீலங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே.கன்வென்ஷனல் ஹாலில் திருமணம் நடந்தது. இத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், கமல், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ராம் சரண், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஷங்கர் வீட்டுத் திருமண விழா

ஷங்கரின் நெருக்கமான உதவி இயக்குநராக இருந்து இன்று பாலிவுட் வரை சென்று கலக்கும் இயக்குநர் அட்லீ, ரன்வீர் சிங் மற்றும் அதிதி ஷங்கருடன் சேர்ந்து ‘அப்படிப்போடு…’ பாடலுக்கு ‘இந்த நட போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’ என கொண்டாட்டத்துடன் நடனமாடி விழாவை அதிர வைத்தனர். ஏ.ஆர். ரஹ்மான், மனைவி ஷெரினா பானு, மகள் கத்திஜா, மகன் அமீன் ஆகியோருடன் வந்திருந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவும், தனது இரு மகன்களுடன் வந்திருந்தார்.

தயாரிப்பாளர் போனி கபூர், தனது மகள் ஜான்வி கபூருடன் வந்து திருமணத்தில் கலந்துகொண்டிருந்தார். மணிரத்னம், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், நெல்சன், அனிருத் ஆகியோர் இத்திருமணத்தில் கலந்துகொண்டது ஒரு நல்ல மீட் அப்பாக அமைந்துவிட்டது.

ஷங்கர் வீட்டுத் திருமண விழா

நட்சத்திரங்கள் பலரும் தன் வீட்டுத் திருமணம் போல குடும்படுத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்து, மணமக்களை வாழ்த்தினர். இதுதவிர மோகன் லால், விஜய்யின் மனைவி சங்கீதா, கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் திருமணமான ரகுல் பிரீத்தி சிங் உள்ளிட்ட பலரும் இத்திருமணத்தில் கலந்துகொண்டிருந்தனர். அக்கா திருமணம் என்பதால் நடிகை அதிதி ஷங்கர், வந்திருந்த முக்கிய விருந்தினர்களை வாசல் வரைச் சென்று வரவேற்று, உபசரித்திருக்கிறார்.

வாழ்த்துகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.