வரலாற்றில் சந்தேகத்துக்குரிய நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பதிலடி

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், காஷ்மீர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதர் ருசிரா கம்போஜ் கூறியதாவது: தற்போதைய இக்கட்டான சூழலுக்கு மத்தியில் இந்த சபை அமைதிக்கான பண்பாட்டை வளர்த்தெடுக்க முயல்கிறது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் முனைப்பாக இருக்கிறோம். ஆகையால் அண்டை நாட்டு உறுப்பினர் முன்வைக்கும் கண்ணியமற்ற கருத்துக்களைக் … Read more

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ஆம் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை

TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை  நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்கு

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் 2024 பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை நேரடியாக இழந்துவிட்டது. அதாவது, இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 8 தோல்விகளுடன் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது. ஆனால், அந்த அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது மற்ற அணிகளின் … Read more

நள்ளிரவு கைதுகள் தொடர்கிறது: பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது…

சென்னை: திமுக அரசு பதவி ஏற்றபிறகு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் விமர்சிக்கும் நபர்களை காவல்துறையைக்கொண்டு நள்ளிரவு கைது செய்யப்படும் சம்பவம் நடந்தேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரபல பத்திரிகையாளரும், யுடியூபருமான சவுக்கு சங்கர் நள்ளிரவில் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில்  சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படுகிறத. இந்த விவகாரத்தில் அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, நள்ளிரவு கைது செய்யப்பட்டு உள்ளார்.  நேற்று … Read more

Aranmanai 4 Box Office: பாக்ஸ் ஆபிஸில் பேயாட்டாம்.. சொல்லியடிச்ச சுந்தர் சி.. அரண்மனை 4 வசூல்!

சென்னை: அரண்மனை 3 படம் அவுட்டானாலும் அசால்ட்டாக இந்த சீரிஸை வெற்றி சீரிஸாக மாற்றி காட்டுகிறேன் என சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே பட்டையை கிளப்பி இருக்கிறது. சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட

கல்வராயன் மலை: தகவல் தொடர்பில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த மலைவாழ் மக்கள் – தீர்வு கண்ட ஆட்சியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலையில், 15 ஊராட்சிகள் இருக்கின்றன. அவற்றில் சிறிதும், பெரிதுமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு  இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று தகவல் தொடர்பு. பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் மட்டுமே இங்கு ஓரளவுக்கு கிடைக்கும். அதிலும் போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள் இப்பகுதி மக்கள். சில பகுதிகளில் நெட்வொர்க்கை … Read more

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து அறிக்கை வெளியிட்டனர். அதன் நினைவாக, மே 3-ம் நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுப்பேரவை உலகப் பத்திரிகை சுதந்திர நாளாக 1993-ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட … Read more

தார் கலவையில் எஃகு நார்கள் சேர்த்து பள்ளத்தை தானே சரிசெய்யும் சாலைகள் அமைக்க திட்டம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்க புரட்சிகர தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு வருகிறது. நெடுஞ்சாலையில் பள்ளம், குழி ஏற்பட்டால், அவற்றை தானாக சரி செய்துகொள்ளும் வகையில் புதிய தார்கலவை பயன்படுத்தப்பட உள்ளது. இதில் எஃகு நார்கள் இருக்கும். சாலையில் பள்ளம் ஏற்பட்டவுடன் தார் கலவை மற்றும் எஃகு நார்கள் தானாக நெகிழ்ந்து பள்ளத்தை அடைத்துவிடும். ஆனால் எஃகு நார்கள் சேர்க்கப்பட்ட தார்கலவை, எவ்வளவு காலத்துக்கு தானாக பழுதுபார்க்கும் பணியை தொடரும் என தெரியவில்லை. … Read more

ஜனவரி முதல் மார்ச் வரையில் விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: ஜனவரி முதல் மார்ச் வரை 2 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மோசடி, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜனவரியில் 67.28 லட்சம், பிப்ரவரியில் 76.28 லட்சம், மார்ச் மாதத்தில் 79.54 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் 2.23 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 2023-ல் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் … Read more

யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்

Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.