ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா சந்திப்பு: ஹரியானா பேரவைத் தேர்தலில் போட்டியா?

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையாக இருப்பவர் வினேஷ் போகத். இவர் அண்மையில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குமுன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரிஸிலிருந்து இந்தியா … Read more

“ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்” – புதின்

மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் கேள்வி பதில் அமர்வில் பேசிய விளாடிமிர் புதின், “ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா என்று கேட்டால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால், சில இடைக்கால கோரிக்கைகளின் அடிப்படையில் அல்ல, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது … Read more

சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?

Vijay Advice For His Son Sanjay In GOAT Movie : தி கோட் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் தனது சொந்த மகன் சஞ்சய்க்கு அட்வைஸ் கொடுப்பது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது. அது என்ன தெரியுமா?   

The GOAT Review: விஜய் vs விஜய்; களம் புதுசுதான் – ஆனால் கதை, திரைக்கதை? | The Greatest of All Time

தீவிரவாதத்தைக் கட்டுக்குள் வைக்கும் ஸ்பெஷல் SATS பிரிவில் அண்டர்கவர் அதிகாரியாக இருக்கிறார் காந்தி (விஜய்). மிஷன் ஒன்றின்போது தன் ஐந்து வயது மகன் ஜீவனை இழந்துவிட்டதாக நினைத்து காந்தி உடைந்துபோயிருக்க, பல வருடங்கள் கழித்து மீண்டும் ஜீவனை (இதுவும் விஜய்தான்) எதிர்பாராத இடம் ஒன்றில் சந்திக்கிறார். இப்படி இணையும் தளபதியும் இளைய தளபதியும் என்ன செய்தார்கள், இவற்றுக்கெல்லாம் பின்னணியிலிருந்த விஷயங்கள் என்னென்ன என்பதே ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஒன்லைன். The Greatest of … Read more

ஜியோவின் அசத்தல் ஆஃபர்… இலவச டேட்டா… OTT பயன்கள்… வாய்ப்பு 5 நாட்களுக்கு மட்டுமே

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடவோன் ஆகிய தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக, மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த நிலையில், மக்கள் பலர் பிஎஸ்என்எல் பக்கம் திரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைக்க, தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஜியோ 8வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சில ஆபர்களை வழங்கியுள்ளது. ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜியோ வழங்கும் அச்சதலான ஆஃபர் விபரம் ரிலையன்ஸ் ஜியோ … Read more

அமெரிக்காவை விட்டு கிளம்பிய நெப்போலியன்.. மகனுக்காக எந்த எல்லைக்கும் போறாரே.. செம நெகிழ்ச்சி

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு விரைவில் ஜப்பானில் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை அவர் மணக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த இருவரின் நிச்சயதார்த்தத்தில் தனுஷ் வீடியோ காலில் கலந்துகொண்டார். அவரால் விமானத்தில் பயணித்து இந்தியாவுக்கு வர முடியாத சூழல் காரணமாக ஜப்பானில் திருமணம் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களது திருமணம் நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் டெங்கு தொற்று நோயாக அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ”கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

பாரா ஒலிம்பிக்: 5-வது தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியா

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் … Read more

இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்: பிரதமர் மோடி

சிங்கப்பூர், சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேசினார். பின்னர் சிங்கப்பூர் பிரதமருடனான உயர்மட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சிங்கப்பூருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 4ஜி என்று சொல்லப்படும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் மேலும் வளர்ச்சி பெறும். சிங்கப்பூர் வெறும் நாடு மட்டும் இல்லை. வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் சிங்கப்பூர் … Read more

வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு

வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு அந்நாட்டின் தூதரகத்தினரால் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் வியட்நாம் தூதுவர் Trinh Thi Tam தலைமையில் 29 அன்று கொண்டாடப்பட்டப்பட்டது இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டார். கடற்றொழில் அமைச்சர் இலங்கை மற்றும் வியட்னாம் நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் பொருளாதார தொடர்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் விஷேட செய்தியை இதன்போது தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் … Read more