கிரீஸ்: சாண்டோரினி தீவில் நிலநடுக்கம் – அவசரநிலை பிரகடனம்

ஏதேன்ஸ், ஐரோப்பாவின் தென்கிழக்கே பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு கிரீஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுக்கூட்டங்கள் உள்ளன. அந்த வகையில் ஏஜியன் கடல் பகுதியில் கிரீசின் சாண்டோரினி தீவு உள்ளது. பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் இந்த தீவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சாண்டோரினி தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாண்டோரினி தீவில் … Read more

Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,000 -எது லாபம்?

சாலை பயணங்களில் தவிர்க்க இயலாத ஒன்று சுங்கச் சாவடி கட்டணம். தொழில் ரீதியாக அடிக்கடி பயணிப்போர், சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வோர் என யாராக இருந்தாலும் சுங்கச் சாவடிகளை கடக்காமல் செல்ல இயலாது. இந்நிலையில் சில இடங்களில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அருகருகிலேயே சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர். பயணம் முடித்து செலவினங்களை கணக்கிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் பெரும் பங்கு வகித்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொருமுறையும் காசு கட்டி சுங்க … Read more

அரசு கோரும் அவகாசத்தை ஏற்க டாஸ்மாக் தொழிற்சங்கம் மறுப்பு: திட்டமிட்டபடி போராட்டம் என அறிவிப்பு

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் எனவும் டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகம் முன்பு பிப்.11-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்.11-ம் … Read more

தமிழக அரசின் மசோதாக்களை ஆளுநர் 3 ஆண்டாக நிறுத்தி வைத்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றநீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று … Read more

விராட் கோலி வந்தால்… வெளியேறப்போவது யாரு? இந்திய அணிக்கு பெரிய சிக்கல்!

India vs England ODI Latest News Updates: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG) இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப். 6) நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ப்ரைஸ் இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், இந்தளவிற்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. விராட் கோலி கால் முட்டி காயத்தால் (Virat Kohli Injury) நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்ரவர்த்திக்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி … Read more

பிப்ரவரி 11 அன்று புதுச்சேரியில் மதுக்கடைகள், பார்கள்  மூடல்

புதுச்சேரி புதுச்சேரி மற்றும் காரைக்காளில் வரும் 11 ஆம் தேதி அன்று மதுக்கடைகள் மற்றும் பார்கள் முடப்படுகின்றன. வரும் 11 ஆம் தேதி வள்ளலார் ஜோதி தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ், ”வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து,மதுபானக் கடைகள் கடைகள், … Read more

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்

புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ‘விமரிஷ் சிருங்கலா’ நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், அவரது கையெழுத்துடன் கூடிய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அன்பளிப்பாக வழங்கினார். ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், “புவனேஸ்வரில் நடந்த உலகக் கோப்பை ஹாக்கி பற்றி நானும், ஜனாதிபதியும் … Read more

வருமானத்தில் 10 சதவீதம் மக்களுக்கு… ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி அறிவிப்பு

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை சந்தித்திருந்த ரிஷப் பண்ட் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார். அந்த வாய்ப்பிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது இந்த கம்பேக் அனைவரது பார்வையையும் திரும்ப வைக்கும் வகையில் அமைந்தது. அந்த … Read more

ஆளில்லா விமானம் தாங்கி போர்க்கப்பலை முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த ஈரான்

தெஹ்ரான், இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டாக நீடித்த நிலையில் தற்போது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. மேலும், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், … Read more

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள் – Suzuki Gixxer SF 250 on-road price and specs

சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 2025 ஆம் வருடத்திற்கான ஜிக்ஸர் SF 250 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Suzuki Gixxer SF 250 ஃபேரிங் ஸ்டைல் பெற்றுள்ள ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக் மாடலி தழுவியதாக  எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் தொடர்ந்து மாறுதல் இல்லாமல் வந்தாலும், சிறிய மாற்றங்களுடன் கூடிய பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றில் சிறிய மேம்பாடுகளை கொண்டதாக அமைந்துள்ளது. … Read more