மசூதியில் இடமில்லையெனில் சாலையில் தொழுகை நடத்துவோம்: டெல்லி ஏஐஎம்ஐஎம் தலைவர் ஷோஹிப் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையின்போது மசூதியில் இடமில்லையெனில் சாலையில் தொழுகை நடத்துவோம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் டெல்லி தலைவர் ஷோஹிப் ஜமாய் தெரிவித்துள்ளார். தற்போது ரம்ஜான் மாத நோன்பை முஸ்லிம்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே, உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், மசூதியின் கூரைகள் அல்லது சாலைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது எனவும், அதை மீறுவோர் மீது சட்டப்படி … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பெய்ஜிங்கில் நேற்று சந்தித்துப் பேசினார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கு சென்றார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை, முகமது யூனுஸ் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே 9 … Read more

ஸ்ரீ யோகா ராமர் கோயில் , நெடுங்குணம்,வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்

ஸ்ரீ யோகா ராமர் கோயில் , நெடுங்குணம்,வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் தல வரலாறு  திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி சேத்துப்பட்டு அருகே உள்ளது நெடுங்குணம் ஸ்ரீ யோகா ராமர் கோயில். இக்கோயிலின் பிரம்மாண்டத்தை அதன் கோபுரமே நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. முகப்பு கோபுரம் ஏழு கலசங்கள் கொண்டதாக 6 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரமாகும். உள்ளே இன்னொரு கோபுரம் ஐந்து கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் திகழ்கிறது. கோயிலின் மண்டபத்தில் உள்ள தூண்கள் கலைநயமிக்க சிற்பங்களின் தொகுப்பாகவே … Read more

சிரியா, லெபனான் இடையே எல்லை வரையறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து

பெய்ரூட், சிரியாவில் 54 ஆண்டு கால ஆசாத் குடும்ப ஆட்சி, கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. முன்னதாக சிரியாவில் சுமார் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், சிரியாவின் ஆசாத் அரசாங்கத்துடன் இணைந்து போரிட்டு வந்தனர். ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல்-காசா போரில் காசாவிற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இந்த … Read more

சென்னை, மதுரையில் ரூ.55 கோடியில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0’ இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது துறைகள் மீதான மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தில் சுமார் 1.15 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை பெறுகின்றனர். கடந்த 19 மாதங்களில் மட்டும் ரூ.21,657 கோடிக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக அதிகரிக்கும். இதன்மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதை சுருக்கமாக டிஏ அழைப்பர். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் … Read more

பயங்கர நிலநடுக்கம்; மியான்மர், தாய்லாந்தில் கட்டிடங்கள் தரைமட்டம்: உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்

நேப்பிடா:மியான்மரில் நேற்று காலை 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலரை காணாததால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் … Read more

சைபர் குற்றங்களை தடுக்கும் தொழில்நுட்பம்: ஒடிசி டெக்னாலஜீஸ் முதன் முறையாக அறிமுகம்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பி.ராபர்ட் ராஜா கூறியதாவது: இந்தியாவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசடியாளர்கள் புதுப்புது வழிமுறைகளை கண்டறிந்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி அண்மைக்காலமாக பிரபலமாகி வருகிறது. சைபர் குற்றங்களில் ஏமாறாமல் இருக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறதே … Read more

பட்டு விவசாயிகளுக்கு ரூ.30 கோடி உதவித்தொகை: சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

பட்டு உற்பத்தித்திறனை ஊக்குவிக்க 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.29.46 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பட்டுவளர்ச்சித்துறை மற்றும் கைவினைப்பொருட்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்துப் பேசியதாவது: தமிழகத்தில் பட்டு உற்பத்தியை பெருக்கி பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கிராமப்புறங்களில் 24 ஆயிரம் பட்டு விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த … Read more

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக … Read more