இங்கிலாந்து தொடரில் தோற்றாலும் கம்பீர் மாற்றப்பட மாட்டார்! காரணம் இதுதான்!

Gautam Gambhir head coach: கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட கௌதம் கம்பீர் பொறுப்பேற்று ஓராண்டுகள் முடிவடைய உள்ளது, அவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்றதை விட அதிகமான தோல்விகளை தான் சந்தித்து உள்ளது. ஐபிஎல்லில் … Read more

"சின்னப் பையனா இருந்தவருக்கு கல்யாணமானு… வயச நம்பமாட்டேங்குறாங்க" – பகிர்கிறார் `பசங்க’ ஶ்ரீராம்

‘பசங்க’ திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்களை என்றும் மறக்க முடியாது. சிறுவயதிலேயே அவரவரின் கதாபாத்திரங்களுக்கு முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தனர். அவர்களுள் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஶ்ரீராமுக்கு அப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. ‘Pasanga’ Sreeram Marriage அப்படத்தைத் தாண்டி ‘கற்றது தமிழ்’, ‘கோலி சோடா’ உட்பட பல படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். சினிமாவைத் தாண்டி தற்போது அவர் கார்பன் கேப்சர் டெக்னாலஜி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஶ்ரீராம், தற்போது தன்னுடைய காதலி … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை:  பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயித்து அரசாணை  வெளியிட்டு உள்ளது. அதன்படி கையப்படுத்தப்பட உள்ள,  3 ஆயிரத்து 331 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு 35 லட்சம் முதல் 2 கோடியே 57 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும். சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

டெம்போ மீது லாரி மோதி 3 பேர் பலி: திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது சோகம்

அமராவதி, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டம் பகேபள்ளி 15க்கும் மேற்பட்டோர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய டெம்போ டிராவலர் வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று டெம்போவில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் குருபலகொடா பகுதியில் டெம்போ டிராவலர் சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் டெம்போ டிராவலரில் பயணம் செய்த 3 பேர் சமப்வ இடத்திலேயே உயிரிழந்தனர். … Read more

சச்சின் முதல் டெஸ்ட் சதம் அடிக்க நான்தான் காரணம் – இங்கிலாந்து முன்னாள் வீரர் நகைச்சுவை

லண்டன், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அதிக சதங்கள் (100) அடித்த வீரராக உள்ளார். இந்திய அணிக்காக 1989-2013-ம் ஆண்டு வரை விளையாடிய அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் 51 சதங்கள் அடித்துள்ளார். அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை 1990-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பதிவு செய்தார். இந்நிலையில் முதல் முறையாக இங்கிலாந்தில் சச்சின் முதல் முறையாக சதம் அடித்ததற்கு காரணம் தான் தவற … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தீயணைப்பு வீரர்கள் 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் இடாஹோ மாகாணம் கொயூர் டி அலீன் நகரில் உள்ள வனப்பகுதியில் தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று இரவு 11 மணியளவில் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். அப்போது, தீயணைப்பு வீரர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தி விட்டு … Read more

ஹைட்ரஜன் வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் நிறங்கள் தெரியுமா.? | Automobile Tamilan

Gemini AI generated Image இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு என பிரத்தியேக பதிவு எண் பிளேட்டை கொண்டு வரவுள்ளதை வெளியிட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் ( Hydrogen fuel-operated vehicles) மூலம் இயக்கப்படுகின்ற வணிகரீதியா பயண்பாடுகளுக்கான வர்த்த வாகனமாக இருந்தால், நம்பர் பிளேட்டின் மேல் பாதி பச்சை நிறத்திலும், கீழ் பாதி நீல நிறத்திலும் இருக்கும், அதே நேரத்தில் பிளேட்டில் உள்ள எண்கள் மஞ்சள் … Read more

சிவகங்கை: 'என் அண்ணன் முன்னாடி என்னையும் அரைமணிநேரம் அடிச்சாங்க' – உயிரிழந்த இளைஞரின் சகோதரர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அண்ணனை மட்டுமின்றி தன்னையும் அடித்ததாக சகோதரர் நவீன் குற்றம்சாட்டி இருக்கிறார். அஜித்குமார் இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “எங்க அண்ணனை பயங்கரமாக அடிச்சாங்க. என்னையும் ஒரு அரை மணிநேரம் எங்க அண்ணன் முன்னாடி வச்சு அடிச்சாங்க. என்னைய அடிச்சா அண்ணன் உண்மையை சொல்லுவான்னு … Read more

ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

சென்னை: ஜூலை 1-ல் மருத்​து​வர்​கள் தினத்​தில் கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு தமிழக அரசுக்கு அரசு மருத்​து​வர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மருத்​து​வக் கட்​டமைப்​பிலும், சுகா​தா​ரத் துறை செயல்​பாடு​களி​லும் தமிழகம் முன்​மா​திரி மாநில​மாக உள்​ளது. ஆனால் அதற்​கான பங்​களிப்​பைத் தரும் அரசு மருத்​து​வர்​களுக்கு நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் தரப்​படு​கிறது. தகு​திக்​கேற்ற ஊதி​யம் வேண்டி அரசு மருத்​து​வர்​கள் நீண்ட கால​மாகவே போராடி வரு​கிறோம். அது​வும் … Read more

‘போர் விமானத்தை இழந்தோம்’ – கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

ஜகர்த்தா: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் போர் விமானங்களை இந்திய விமானப்படை இழந்ததாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தோனேசியாவில் தெரிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்காமல் தீவிரவாதிகளின் கட்டமைப்பை மட்டுமே இலக்காக கொண்டு தாக்க வேண்டுமென்ற கட்டளை காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 10-ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் உரையாற்றினார். அப்போது … Read more