இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக: கொலம்பியாவில் ராகுல் காந்தி பேச்சு

கொலம்பியா: “இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார். கொலம்பியாவில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “​இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல் தேவை. அதேபோல, இந்தியாவில் வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துகளுக்கும் இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஜனநாயக அமைப்புதான். தற்போது, ​​ஆளும் பாஜக அரசில் ஜனநாயக அமைப்பின் மீது முழுமையாக … Read more

‘ஜாவா சுந்தரேசன்’ என பெயர் மாற்றிய பிரபல நடிகர்! காரணம் என்ன?

Chaams Changed His Name As Java Sundaresan : பிரகாஷ் ராஜ்ஜின், அறை எண் 305-ல் கடவுள் படத்தில் வந்த நடிகர், சாமிநாதன். இவர் தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ள சம்பவம், வைரலாகி வருகிறது.

கஞ்சா விற்பவர்களை கைது செய்யாமல் ஆர் எஸ் எஸ் அமைப்பினரை கைது செய்வதா? தமிழிசை கண்டனம்

போரூர் அருகே சாகா பயிற்சியில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸை 162 ரன்களில் சுருட்டிய இந்தியா.. இன்னும் 41 ரன்கள்தான்!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணி இரண்டு டெஸ்ட் போட்டி விளையாட இருக்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 02) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.  Add Zee News as a Preferred Source அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை … Read more

̀̀“இனி நான் சாம்ஸ் இல்ல, என் பெயர் ஜாவா சுந்தரேசன்'' – பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் சாம்ஸ்

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சாம்ஸ். சாம்ஸ் என்பதைத் தாண்டி ̀அறை எண் 305-ல் கடவுள்’ படத்தின் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரப் பெயரைச் சொன்னால்தான் இவரின் முகம் சட்டென பலருக்கு நினைவுக்கு வரும். அந்தளவிற்கு அந்தக் கதாபாத்திரம் இவரை மக்களிடம் பரிச்சயமாக்கியது. இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் சாம்ஸ் என்ற பெயருடன் நடித்தவர் தற்போது தனது பெயரையே ஜாவா சுந்தரேசன் என மாற்றிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ̀அறை எண் 305-ல் கடவுள்’ படத்தின் இயக்குநர் … Read more

பருவமழை முன்னெச்சரிக்கை: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து   அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரத்தில் பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பருவமழை முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலும்,  குடிநீர், கழிவுநீர், மழைநீர் வடிகால் பணிகள் அக்டோபர் 15க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், மழைநீர் தேங்காமல் தடுக்க தேவைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் … Read more

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

இந்திய பயணிகள் வாகன சந்தையில் முடிந்த செப்டம்பர் 2025 மாதத்தில் ஒட்டுமொத்தமாகச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தமாக 3,78,453 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2024-இல் விற்ற 3,58,884 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 5.5% வளர்ச்சி ஆகும். இருப்பினும், இந்தக் கூட்டு வளர்ச்சிக்குப் பின்னால் பல்வேறு நிறுவனங்களின் விற்பனை ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. முன்னிலை வகிக்கும் நிறுவனங்களின் செயல்பாடு சந்தையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுசூகி, இந்த … Read more

மனைவியிடம் 20 வருடங்களாக பேசாத கணவர்..காரணம் கேட்டா-ஆடிப்போவீங்க!

Japanese Man Did Not Talk To His Wife For 20 Years : ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியிடம் 20 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளார். இதற்கான காரணம், இணையத்தையே அதிர வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்கு எதிராக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை யாழ்ப்பாண செம்மணி வளைவுப் பகுதியில் வடக்கு- கிழக்கு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான புதன்கிழமை அன்று செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூட்டுத் தொகுதிகளுக்கு நீதி … Read more

“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” – சீமான்

சென்னை: “தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். … Read more